மெர்கிடு
மெர்கிடு (மொங்கோலியம்: Мэргид, பொருள். "திறமையான/விவேகமான") என்பது ஐந்து முக்கியமான நாடோடிக் கூட்டமைப்புகளில் (கான்லிக்) ஒன்று ஆகும். இவர்கள் ஆரம்பத்தில் துருக்கிய மக்களாக இருந்திருக்கலாம், பின்னர் மொங்கோலிய மக்கள் ஆக்கப்பட்டனர். இவர்கள் 12ம் நூற்றாண்டில் மொங்கோலியப் பீடபூமியில் வசித்தனர்.
மெர்கிடு மூன்று மெர்கிடுகள் | |||||
நாடோடிக் கூட்டமைப்பு | |||||
| |||||
![]() மெர்கிடு அமைவிடம் மொங்கோலியப் பேரரசு 1207ல் | |||||
தலைநகரம் | குறிப்பிடப்படவில்லை | ||||
மொழி(கள்) | நடு மொங்கோலியம் | ||||
சமயம் | சாமனிசம் | ||||
அரசாங்கம் | தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் | ||||
தோகுதோவா (இரண்டாம்) | |||||
வரலாற்றுக் காலம் | பிந்தைய பாரம்பரிய நடு ஆசியா | ||||
- | உருவாக்கம் | 11ம் நூற்றாண்டு | |||
- | குலைவு | 1200 | |||
தற்போதைய பகுதிகள் | ![]() | ||||
மெர்கிடுகள் செலெங்கே மற்றும் ஓர்கோன் ஆற்று (தற்போதைய தெற்கு புரியாத்தியா மற்றும் செலெங்கே மாகாணம்) வடிநிலப் பகுதிகளில் வாழ்ந்தனர்.[1] 20 வருடப் போராட்டங்களுக்குப் பிறகு இவர்கள் 1200ல் செங்கிஸ் கானால் தோற்கடிக்கப்பட்டு மொங்கோலியப் பேரரசில் இணைக்கப்பட்டனர்.
உசாத்துணை
- History of Mongolia, Volume II, 2003
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.