மேல இலந்தைகுளம்

மேல இலந்தைகுளம் (ஆங்கிலம் : Mela Ilandaikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

மேல இலந்தைகுளம்

மேல இலந்தைக்குளம்

மேல இலந்தைகுளம்
இருப்பிடம்: மேல இலந்தைகுளம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°56′34″N 77°41′09″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 3,583 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


475 மீட்டர்கள் (1,558 ft)

வரலாறு

மேல இலந்தைகுளம் அல்லது மேல இலந்தைக்குளம். இவ்வூருக்கு இந்தப் பெயர் வர இந்த ஊரில் உள்ள 3
கிமீ நீளமும் 2 கிமீ அகலமும் கொண்ட குளமும் ஒரு காரணமாகும். இந்தக் குளத்தில் சேமிக்கப்படும் மழை நீர் விவசாயத்துக்கு மிகவும் பயனுடையதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தக் குளத்தில் இலந்தை மரங்கள் அதிகம் உள்ளதால் இந்த ஊருக்கு இலந்தைகுளம் என பெயர் வந்தது.

மக்கள்வகைப்பாடு

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2001 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு அறிக்கையின்படி 3583 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 1767 ஆண்கள், 1816 பெண்கள் ஆவார்கள். மேல இலந்தைகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.67% ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள்-188, பெண் குழந்தைகள்-164, ஆவார்கள்.

சமயங்கள் மற்றும் திருவிழாக்கள்

தேவாலயங்கள்

1)தூய பவுல் ஆலய பிரதிஷ்டை திருவிழா (7 நாட்கள்) ஒவ்வொரு மே மாதம்.

2)ஆர்.சி கத்தோலிக்கத் திருவிழா (3 நாட்கள்) ஒவ்வொரு மே மாதம்.

இந்து கோயில்கள்

1)இசக்கியம்மன் கோயில், சுடலை மாடன் கோயில், மற்றும் விநாயகர் கோயில் ஆகிய கோயில் உள்ளது. இவற்றின் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் கடைசி 3 நாள்கள் கொண்டாடப்படுகின்றது.

2)மாரியம்மன் கோயில், கறுப்பசாமி கோயில், மற்றும் ஜயனார் கோயில் இவை ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் அன்று கொடை விழாக்கள் கொண்டாடபடுகின்றது.

பள்ளிவாசல்(மசூதி)

இந்த ஊரின் வடதிசை மத்தியில் ஒரு பழமை வாய்ந்த பள்ளிவாசல்(மசூதி) உள்ளது. இவ் ஊரில் முஸ்லிம்கள் இல்லை இருப்பினும் பக்கத்துக் கிராமங்களில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் இங்கு வருடம் தோறும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று சந்தனக் கூடு என்னும் திருவிழாவை மிகச்சிறப்பாக கொண்டாடுவார்கள்.

பள்ளிக்கூடங்கள்

1)டீ.டி.டீ.ஏ நடுநிலைப்பள்ளி (1 முதல் 8 முடிய)

2)டீ.டி.டீ.ஏ தொடக்கப் பள்ளி (1 முதல் 5 முடிய)

3)திரு இருதய மேல் நிலைப் பள்ளி (6 முதல் 12 முடிய)

மின்சாரம் தயாரிப்பு

இந்த ஊரினைச் சுற்றி நான்கு திசையிலும் சுமார் 500 மின்சாரக் காற்றாடி அமைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஒரு காற்றாடியின் மூலம் 1250 கிலோ வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படுகிரது.

படத்தொகுப்புகள்

ஆதாரம்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. http://www.voiceofbharat.org/tirunelveli/view_results.asp?NAME=&sorttype=ASC&NAV=6&sortid=LEVEL - 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.