மீனவர்

தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும், (1076 கி.மீ.) [1], தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ளன. கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும், மீன் பிடிப்பவர்களையும் அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள் எனப்படுகிறது. தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள் ஆகும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு, 1076 கி.மீ நீள கடல்கரையை கொண்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007–2008, கணக்கெடுப்பின் படி, மீன்பிடி 559,360 மெட்ரிக் டன்கள் ஆகும்.

தமிழ்நாட்டின் கடலோர நீளம்:[2]

கடலோரம்இடம்நீளம் கி.மீ
கோரமண்டல் கடற்கரைசென்னை முதல் கோடியக்கரை வரை357.2
பாக் சலசந்திகோடியக்கரை முதல் பாம்பன் வரை293.9
மன்னார் வளைகுடாபாம்பன் முதல் கன்னியாகுமரி வரை364.9
மேற்கு கடற்கரைகன்னியாகுமரி முதல் நீரோடி60.0

வரலாறு

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.[3]

சமூக அமைப்பு

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.

  1. பரவர்
  2. வலையர்
  3. கரையார்
  4. முக்குவர்
  5. செம்படவர்( பருவதராஜகுலம்)
  6. கடையர்
  7. திமிலர்

தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள்

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.[4]

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.