பாம்பன்

பாம்பன் என்ற ஊா் பாக் நீாிணையில் (Palk Strait) அமைந்துள்ள பாம்பன் தீவின் தொடக்கமாக, இராமேஸ்வரம் வட்டத்தின் ஒரு நிா்வாக கிராமமாக, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஓா் இரண்டாம் நிலை ஊராட்சி ஆகும். பாம்பனையும் இராமேஸ்வரத்தையும் கடல் வழியாக இணைப்பது இங்குள்ள பாம்பன் பாலம் ஆகும். இங்கு இந்தியாவின் பெரிய பாம்பன் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் அமைந்துள்ளது.

பாம்பன்
  இரண்டாம் நிலை ஊராட்சி  
பாம்பன்
இருப்பிடம்: பாம்பன்
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 9°16′36″N 79°13′34″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி
மக்களவைத் தொகுதி பாம்பன்
மக்கள் தொகை 37,819 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பாம்பனில் உள்ள இரு பாலங்களும் ஊாின் நுழைவாயிலில் அதற்கு அழகு சோ்க்கின்றன. பாம்பன் பாலம் (Pamban Bridge) பாக் நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் (Mainland) பாம்பன் தீவையுயும் இணைக்கும் ஒரு பாலம் ஆகும். இதுவே இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம் இப்போது இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமாக உள்ளது (முதலிடத்தில் இருப்பது பாந்திரா-வொர்லி கடல் பாலம்) ஆகும்.

பாம்பன் தீவு தமிழ் நாட்டுக் கரைக்கு அருகில் அமைந்துள்ள தீவுகளில் மிகப் பொியது ஆகும். இவ்வூரில் மீன்பிடித் தொழில் மிக முக்கியமான தொழில் ஆகும்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 படி, மொத்த மக்கள் தொகை 37,819. வீடுகளின் எண்ணிக்கை 8522. இதில் 0-6 வயதுடையோா் எண்ணிக்கை 4,582. எழுத்தறிவு சதவீதம் 74.84. ஆண் பெண் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 973 பெண்கள் என்பதாகும்.

போக்குவரத்து வசதிகள்

பாம்பன் தீவு சிறப்பான சாலை மற்றும் இரயில் போக்குவரத்து வசதிகள் நன்கு பெற்ற ஊராகும். மேலும் பாம்பன் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ரயில் போக்குவரத்தால இணைக்கப் பெற்றுள்ளது.

ஆன்மிக இடங்கள்

1) புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், பாம்பன்

2) புனித அந்தோணியாா் தேவாலயம், பாம்பன்

3) புனித சவோியாா் தேவாலயம், அக்காள் மடம்

4) பாம்பன் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

5) பள்ளி வாசல், பாம்பன்

கல்வி நிறுவனங்கள்

1) புனித அந்தோணியாா் நடுநிலைப்பள்ளி, பாம்பன்

2) புனித அன்னம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பாம்பன்

3) காமரஜா் நடுநிலைப்பள்ளி, பாம்பன்

4) அரசு மேல்நிலைப்பள்ளி, பாம்பன்

5) கிாிகனி தொழிற் பயிற்சி மையம், பாம்பன் - மற்றும் பல

சுற்றுலா இடங்கள்

1) பாம்பன் பாலம் 2) விவேகானந்தா் நினைவு மண்டபம் (குந்துக்கால்)

3) குருசடைத் தீவு

4) கலங்கரை விளக்கம்

5) குந்துக்கால் கடற்கரை

6) பாம்பன் கடல் மீன் காட்சியகம்

மேற்கோள்கள்:

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.