நீரோடி

லூவா பிழை: bad argument #1 to 'gsub' (string is not UTF-8). நீரோடி இந்தியாவில் தமிழ்நாட்டின் தென்கோடி கடற்கரை முனையில் அமைந்திருக்கும் கிராமமாகும். இது அரபிக் கடல் மற்றும் ஏ.வி.எம். கால்வாயால் சுற்றப்பட்டு காணப்படுகிறது. ஒரு சாலை இந்த கிராமத்தை இரண்டாக பிாிக்கிறது. நீரோடியில் பேசப்படும் முக்கிய மொழிகள் தமிழ் மற்றும் மலையாளம் ஆகும்.

வரலாற்றுப் பின்னணி

வரலாற்று ரீதியாக, நீரோடி திருவிதாங்கூர் அரசின் ஒரு பகுதியாகும். 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி நீரோடி தமிழ்நாடு மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

நீரோடி 100% கிறிஸ்தவர்கள் வாழும் கிராமம் அகும். இந்தியாவில் போர்த்துகீசிய மிஷினரிகளின் வருகையிலிருந்தோ அல்லது அதற்கு முன்னிருந்தோ நீரோடியில் கிறிஸ்தவ மதம் இருந்திருக்கலாம். மேலும், புனித பிரான்சிஸ் சவோியாா் பதினாறாம் நூற்றாண்டின் முடிவில் தென்னிந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்பியதன் விளைவாக இந்திய கடற்கரைகளில் கிறிஸ்தவ சமுதாயங்கள் நன்கு வளர்ச்சியடைந்தன.

இப்போது நீரோடி கொல்லங்கோடு பஞ்சாயத்தின் பகுதியாக உள்ளது.

பொருளாதாரம்

நீரோடியிலுள்ள ஏறக்குறைய 95 சதவீத மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள 5% மக்கள் படித்தவர்களோ அல்லது சம்பளம் பெறுபவர்களோ ஆவர். இருப்பினும், முழு சமூகமும் கடலையே நம்பியுள்ளனர். 

நீரோடி மீனவர்கள் தங்கள் புலம்பெயரும் மீன்பிடி வகைகளுக்கு பெயர்போனவர்கள். இந்த மீனவர்கள் பருவகால மீன்பிடிப்பு வல்லுனர்களாக உள்ளனர். பல நூற்றுக்கணக்கான மைல்கள் தாண்டி மீன் பிடிக்க செல்கின்றனர். ஆனி-ஆடி பருவத்தில் (ஜூன் மற்றும் ஆகஸ்ட்டிற்கு இடையே), அவர்கள் விழிஞ்சம் கடல் துறைமுகத்திற்கு செல்கின்றனர். மற்ற பருவங்களில், மங்கலாபுரம், பல்லிகரா, நீண்டகரை, காட்பாடி, காபு, மற்றும் எஜமடி ஆகிய நகரங்களுக்குப் போகிறார்கள். நீரோடி மீனவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களும் வறுமைக்கோட்டிற்கு கீழே காணப்படுகிறது.

கல்வி

நீரோடியில் புனித நிக்கோலாஸ் உயர்நிலை பள்ளி மற்றும் 7 நர்சரி பள்ளிகளும் உள்ளன. 10 ஆம் வகுப்பு தேர்வில் 100% வெற்றி கிடைத்துள்ளது. எனினும், 5% மாணவர்கள் எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க மாட்டார்கள். 1990 ஆம் ஆண்டிற்கு முன்பு, சிறு வயதிலிருந்தே குடும்பத்தை கவனிக்க மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அனைவரும் படித்தவர்கள். டிசம்பர் 6 ஆம் நாள் புனித நிக்கோலாஸ் திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

நீரோடியில் ஒரு கிரிக்கெட் அணி மற்றும் ஒரு கால்பந்து அணி உள்ளது. கால்பந்து அணி, நிறைய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் பந்தய விளையாட்டு போட்டிகள் வென்றுள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.