ரமோன் மக்சேசே விருது
ரமோன் மக்சேசே விருது (Ramon Magsaysay Award) ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியம் (RBF) பொறுப்பாளர்களால் ஏப்ரல் 1957இல் நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை காட்டாக வளரும் நாடுகளில் பரப்பவும் இப்பரிசு ஏற்படுத்தப்பட்டது. இது ஆசியாவின் நோபல் பரிசு என அறியப்படுகிறது.[1][2][3]
ரமோன் மக்சேசே விருது | |
விருதுக்கான காரணம் | அரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை, தாளியல்,இலக்கியம் மற்றும் மக்கள் தொடர்பு கலை, அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல் மற்றும் வளரும் தலைமை ஆகிய துறைகளில் தலைசிறந்தவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது. |
வழங்கியவர் | ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை |
நாடு | பிலிப்பைன்ஸ் |
முதலாவது விருது | 1958 |
அதிகாரபூர்வ தளம் |
---|

ஒவ்வொரு ஆண்டும் ரமோன் மக்சேசே விருது நிறுவனம் ஆசியாவில் தங்கள் துறையில் சிறந்து விளங்கும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பரிசு வழங்கி வருகிறது. ஆறு வகைகளில் இப்பரிசு வழங்கப்படுகிறது:
- அரசுப்பணி
- பொது சேவை
- சமூக தலைமை
- தாளியல்,இலக்கியம் மற்றும் மக்கள் தொடர்பு கலை
- அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல்
- வளரும் தலைமை
"வளரும் தலைமை" என்ற வகை 2000ஆம் ஆண்டு ஆறாவது பகுப்பாக தொடங்கப்பட்டது. இப்பரிசு "தங்கள் சுற்றுப்புறத்தில் சமூக மாற்றங்களை ஏற்படுத்த சிறப்பாக பணியாற்றிய, ஆனால் வெளியே அதிகம் அறியப்படாத, நாற்பது வயதிற்கு குறைவான தனிநபர்களுக்கு" வழங்கப்படுகிறது.
2008 வரை வழங்கப்பட்டுள்ள 254 விருதுகளில், 49 இந்தியர்களுக்கும், 39 பிலிப்பைன் நாட்டவருக்கும், 23 ஜப்பானியருக்கும் மற்றவை ஆசியாவின் பிற நாட்டினருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
பரிசு பெற்ற இந்தியர்கள்
ரமோன் மக்சேசே விருது பெற்ற இந்தியர்கள்:[4]
1958 | வினோபா பாவே |
1959 | சிந்தாமணி துவாரகநாத் தேஷ்முக் |
1961 | அமிதாப் சௌத்திரி |
1962 | அன்னை தெரேசா |
1963 | வர்கீஸ் குரியன் |
1963 | தாரா கரோடி |
1963 | திருபுவன்தாஸ் படேல் |
1964 | வெல்த்தி பிசர் |
1965 | ஜெயபிரகாஷ் நாராயண் |
1966 | கமலாதேவி சட்டோபாத்தியாயா |
1967 | சத்யஜித் ராய் |
1971 | எம். எஸ். சுவாமிநாதன், தமிழ்நாடு |
1974 | எம். எஸ். சுப்புலட்சுமி, தமிழ்நாடு |
1975 | பூப்ளி ஜார்ஜ் வர்கிஸ் |
1976 | ஹென்னிங் ஹால்க் லார்சன் |
1977 | இலா பட் |
1979 | மாபெலே அரோலே |
1981 | கௌர் கிசோர் கோஷ் |
1981 | பிரமோத் கரண் சேத்தி |
1982 | காந்தி பிரசாத் பட் |
1982 | மணிபாய் தேசாய் |
1982 | அருண் சோரி |
1984 | ஆர். கே. லட்சுமண் |
1985 | முரளிதர் தேவதாஸ் ஆப்தே |
1989 | லெட்சுமி சந்த் ஜெயின் |
1991 | கே. வி. சுப்பண்ணா |
1992 | ரவி சங்கர் |
1993 | பன்னூ ஜெகாங்கீர் கோயாஜி |
1994 | கிரண் பேடி |
1996 | பாண்டுரங்க அதவாலே |
1996 | டி. என். சேஷன் |
1997 | மகாசுவேதா தேவி |
2000 | ஜாக்கின் அற்புதம் |
2000 | அருணா ராய் |
2001 | ராஜேந்திர சிங் |
2002 | சந்தீப் பாண்டே |
2003 | ஜேம்ஸ் மைக்கேல் லிங்டே |
2003 | சாந்தா சிங்கா |
2004 | லெட்சுமி நாராயணன் ராம்தாஸ் |
2005 | வி. சாந்தா |
2006 | அரவிந்த் கெஜ்ரிவால் |
2007 | பாலகும்மி சாய்நாத் |
2008 | மந்தாகினி ஆம்தே |
2009 | தீப் ஜோஷி |
2011 | நீலிமா மிஸ்ரா |
2011 | ஆரிசு ஆண்டே |
2012 | குழந்தை பிரான்சிசு |
2015 | சஞ்சய் சதுர்வேதி |
2016 | டி. எம். கிருஷ்ணா, தமிழ்நாடு[5] |
2016 | பெஜவாடா வில்சன், கர்நாடகா[5] |
குறிப்புகள்
- Clare Arthurs (2000-07-25). "Activists share 'Asian Nobel Prize'". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/851034.stm. பார்த்த நாள்: 2008-02-20.
- "Arvind Kejriwal selected for Magsaysay Award". The Times of India. 2006-07-31. http://timesofindia.indiatimes.com/articleshow/1832474.cms. பார்த்த நாள்: 2008-02-21.
- Ann Bernadette Corvera (2003-10-08). "'03 RAMON MAGSAYSAY AWARDEES: A LEAGUE OF EXTRAORDINARY MEN & WOMEN". Philippine Star. http://www.newsflash.org/2003/05/si/si001665.htm. பார்த்த நாள்: 2008-02-21.
- Ramon Magsaysay Award Winners from India – Complete List
- Bezwada Wilson, TM Krishna win Ramon Magsaysay Award for 2016