கமலாதேவி சட்டோபாத்யாய்
கமலா சட்டோபாத்தியாயா (Kamaladevi Chattopadhyay) 3 ஏப்ரல் 1903–29 அக்டோபர் 1988) என்பவர் ஒரு இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக நினைவு கூரப்படுகிறார். மேலும் இந்திய கைவினைப் பொருள்கள், கைத்தறி வளர்ச்சி, சுதந்திர இந்தியாவில் நாடக மறுமலர்ச்சி ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக இருந்தார். மேலும் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாகவும், இந்திய பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்தவர்.
கமலாதேவி சட்டோபாத்யாய் | |
---|---|
பிறப்பு | 3 ஏப்ரல் 1903 மங்களூர் |
இறப்பு | 29 அக்டோபர் 1988 (அகவை 85) மும்பை |
படித்த இடங்கள் |
|
பணி | அரசியற் செயற்பாட்டாளர் |
வாழ்க்கைத் துணை(கள்) | Harindranath Chattopadhyay |
சங்கீத நாடக அகாதெமியின் துணைத்தலைவர், பாரதீய நாட்டிய சங்கத்தின் தலைவர், அகில இந்திய கைவினைஞர்கள் வாரியத் தலைவர், யுனெஸ்கோவின் உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்து சிறப்பாகப் பணியாற்றியவர்.[1]
வாழ்க்கை
இவர் 3 ஏப்ரல் 1903 அன்று மங்களூரில் இவரது பெற்றோருக்கு நான்காவது மகளாகப் பிறந்தார். இவரின் தந்தை ஆனந்தையா தரேஸ்வர் மாவட்ட ஆட்சியராக மங்களூரில் இருந்தார், இவரின் தாயார் பெயர் கிரிஜாபாய் ஆகும்.
கமலாதேவி படிப்பில் கெட்டிக்காராக இருந்தார் இவரது பெற்றோர்களைப் பார்க்க வீட்டிற்கு வரும் மகாதேவ கோவிந்த ராணடே, கோபாலகிருஷ்ண கோகலே, ராமாபாய் ராணடே, அன்னிபெசண்ட் அம்மையார் போன்ற தலைவர்களின் உரையாடல்களைக் கேட்டு, இளம் வயதிலேயே சுதேச இயக்கத்தில் ஆர்வம் கொண்டார்.
இவர் சமசுகிருத பாரம்பரிய நாடக்கலையான கேரள- கூடியாட்டத்தை, அதில் சிறந்த ஆசிரியரும் அபிநயத்தில் சிறந்த நடன ஆசிரியரான பத்மசிறீ மணி மாதவ சாக்கியார் என்பவரின் ஊரான கிள்ளிக்குரிசிமங்களத்தில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்து கற்றார்.[2]
இவரது இளமைக் காலம் சோகம் நிறைந்ததாக இருந்தது. இவரது முன்மாதிரியாக இருந்த இவரது அக்காள், சகுணா, அவரது இளம் வயதில் திருமணம் முடிந்த உடனேயே, இறந்து போனார். கமலாவின் தந்தை அவருக்கு ஏழு வயதிருக்கும் போதே இறந்தார்.
முதல் திருமணம்
இவருக்கு 1917இல், 14 வயதானபோது திருமணம் நடந்தது ஆனால் இரண்டாண்டுகளில் கணவர் இறந்தார்.
1920களில்
அரிந்திரநாத்துடனான திருமணம்
இதற்கிடையில், சென்னை ராணி மேரி கல்லூரியில் தன் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது அவருடன் படித்த சக மாணவரான சுஹாசினி சட்டோபாத்யாவின் இளைய சகோதரி சரோஜினி நாயுடு, அறிமுகமானார். பின்னர் தங்கள் திறமையான சகோதரனான அரியை கமலாதேவிக்கு அறிமுகப்படுத்தினர். அவர் நன்கு அறியப்பட்ட ஒரு கவிஞர்- எழுத்தாளர், நடிகர் போன்ற பன்முகத்தன்மை உடையவராக இருந்தார். கலைகளில் ஈடுபாடு உடைய இருவருக்கும் நல்ல புரிதல் உண்டாயிற்று.
கமலாதேவிக்கு இருபது வயது இருக்கும்போது அரிந்திரநாத் சட்டோபாத்யாய உடன் திருமணம் நடந்த்து. இந்த விதவை திருமணத்திற்கு சமூகத்தில் எதிர்ப்பு கடுமையாக இருந்தது. இந்த தம்பதியினரின் ஒரே மகன் ராமா அடுத்த ஆண்டு பிறந்தார்.[3]
பிற்காலத்தில் இவர் சில திரைப்படங்களில் நடித்தார். அக்காலத்தில் நல்ல குடும்ப்ப் பெண்கள் திரைப்படங்களில் நடிப்பது ஆதரிக்கப்படாத காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் ஊமைப்படங்களில் நடித்தார். இதில் ஒன்று கன்னடத் திரையுலகின் முதல் படமான, மிரிச்சகட்டிகா (வசந்தசேனா) (1931). இரண்டாவது படமாக தான்சேன் என்ற இந்தி படத்தில் 1943இல் நடித்தார். உடன் நடித்தவர்கள் கே.எல் சய்கல் மற்றும் குர்ஷீத் ,[4] தொடர்ந்து ஷங்கர் பார்வதி (1943), மற்றும் தான்னா பஹத் (1945) ஆகிய படங்களில் நடித்தார்.[5]
திருமணமான பல ஆண்டுகளுக்கு பிறகு, கமலாதேவியும் அவர் கணவரும் பிரிந்தனர். கமலாதேவி விவாகரத்து பெற்றார். அந்நாளில் இது பெண்கள் பின்பற்ற அஞ்சும், தயங்கும் மிகப் புதிதான ஒரு நடைமுறை. எனவே இதைக் குறித்தும் கமலா தேவி மீது மிகுந்த விமர்சனங்கள் எழுந்தன.
இலண்டன் செல்லல்
அவர்களது திருமணத்திற்கு கொஞ்ச காலத்திற்கு பிறகு அரிந்திரநாத் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கோண்டு, லண்டன் சென்றார். ஒரு சில மாதங்கள் கழித்து கமலாதேவி, அங்கு சென்று அவருடன் சேர்ந்தார், அவருடன் சேர்ந்து இலண்டன் பல்கலைக்கழகத்தின் பெட்ஃபோர்ட் கல்லூரியில் சமூகவியல் பாடத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.
விடுதலை இயக்கத்திற்கான அழைப்பு
கமலாதேவி இலண்டனில் இருந்தபோது, இந்தியாவில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்துக்கு 1923இல் அழைப்புவிடுத்ததை அறிந்து இந்தியா திரும்பி, சேவாதளத்தளம் என்னும் காந்திய அமைப்பில் இணைந்தார். விரைவில் கமலாதேவி தளத்தின் மகளிர் பிரிவின் பொறுப்பாளராக ஆனார். சேவாதளத்தின் சார்பில் அனைத்திந்திய அளவில் ஆளெடுப்பது பெண்களுக்கு பயிற்சி அளிப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டார்.
1926, இல் இவர் அனைத்திந்திய மகளிர் மாநாடு (AIWC) அமைப்பின் நிறுவனரான மார்கரெட் கசின்சு என்பவரை சந்தித்தார். அவரின் தாக்கத்தால் சென்னை மாகாண சட்டசபைக்கு போட்டியிட்டார். இவர்தான் இந்தியாவில் சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண் ஆவார். இவர் தேர்தல் வேலைகளை சில நாட்கள்தான் பார்க்கதான் இயன்றது. ஆனாலும் இவர் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
அனைத்திந்திய மகளிர் மாநாடு
அடுத்த ஆண்டில், அனைத்து-இந்திய மகளிர் மாநாடு (AIWC) நிறுவப்பட அதன் முதல் அமைப்புச் செயலாளராக ஆனார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அ.இ.ம.மா. கிளைகள் நாடு முழுவதும் இயங்கத் துவங்கின, தன்னார்வ திட்டங்கள் கொண்டு மதிப்புள்ள தேசிய அமைப்பானது. கமலாதேவி, இந்தியா மட்டுமின்றி அய்ரோப்பிய நாடுகளிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களுக்கான கல்வி, சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள் முதலியவை குறித்து ஆராய்ந்தார். அதன் பயனாக டெல்லியில் பெண்களுக்கான ஹோம் சயின்ஸ் (Lady Irvin College for Home Science) கல்லூரியை ஆரம்பித்தார்.
1930களில்
காந்தியடிகளால் 1930-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகக் குழு உறுப்பினர்களான ஏழு பேர்களில் இவரும் ஒருவராக இருந்து மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவில் உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது சுதேசி உப்பை மும்பையை பங்கு சந்தையில் விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டார். இதற்கு ஓராண்டு கழித்து 1936இல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயபிரகாஷ் நாராயணன், ராம்மனோகர் லோகியா, மினுமசானி முதலிய தலைவர்களுடன் இணைந்து பாடுபட்டார்.
1940களில்
இரண்டாம் உலகப்போர் துவங்கிய காலத்தில் கமலாதேவி இங்கிலாந்தில் இருந்தார், அவர் உடனடியாக மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் நிலைமையை இந்தியாவின் பிரதிநிதியாக சென்று இந்தியாவின் விடுதலைக்கு ஆதரவைத் திரட்டினார்.
விடுதலைக்கு பிந்தைய பணிகள்
இந்தியா சுதந்திரமடையும்போது இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளான பிரிந்தன. இதனையொட்டி நாட்டில் இந்து –முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் பல்லாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் அகதிகளாக்கப்பட்டனர். இந்த வேளையில் மக்களுக்கு பரிதாபாத் நகரத்தில் சேவை மையம் அமைத்து 50,000 மக்களுக்கு மருத்துவ உதவியும், உணவு வசதியும், தங்குமிடமும் செய்து கொடுத்தார்.
இவ்வாறு மக்கள் மறுவாழ்வுக்கும் அதே சமயம் அவர்கள் இழந்த கைவினைத் தொழிலுக்கு உதவும் பணியினை இரண்டாம் கட்டமாக தொடங்கினார். இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறி ஆகியவற்றிற்கு சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் பெரும் புத்துயிர் அளிக்க வேண்டும் என பொறுப்பெடுத்து நவீன இந்தியாவில் அதன் மிகப்பெரிய மரபை காக்க பாடுபட்டார்.[6]
விருதுகள்
இவரது பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அரசு பத்ம பூசன் விருதை 1955இல் அளித்தது. பின்னர் இரண்டாவது மிக உயரிய விருதான, பத்ம விபூசன் விருதை 1987லிலும்,[7] ராமன் மகசேசே விருதை 1966இல் பெற்றார். மேலும் சங்கீத் நாடக அகாடமி விருது , இசை, நடனம், நாடகம் ஆகியவற்றுக்காக இந்தியாவின் தேசிய அகாடமி, 1974 இல் வாழ்நாள் சாதனைக்கான விருது வழங்கியது.[8]
யுனெஸ்கோ அமைப்பு கைவினைப். ஊக்குவிக்கும் இவரது பணிகளுக்காக 1977 இல் விருது வழங்கியது. சாந்தி நிகேதனும், அதன் மிக உயர்ந்த விருதை அளித்து இவரைப் பாராட்டியது.
கமலாதேவி சட்டோபாத்யாய எழுதிய நூல்கள்
- இந்திய பெண்களின் விழிப்பு, எவ்ரிமான்'ஸ் பிரஸ், 1939
- ஜப்பான்-அதன் பலவீனமும், வலிமையும், பத்ம வெளியீடுகள் 1943.
- அங்கிள் சாமின் பேரரசு, பத்ம வெளியீடுகள் லிமிடெட், 1944.
- யுத்தத்தால் சீரழிந்த சீனா, பத்ம பப்ளிகேஷன்ஸ், 1944 ல்.
- ஒரு தேசிய தியேட்டர், (அனைத்து இந்திய பெண்கள் மாநாடு, கலாச்சார பிரிவு. கலாச்சார புத்தகங்கள்), ஆந்த் பப் நோக்கி. அறக்கட்டளை, 1945
- . அமெரிக்கா ,: superlatives நிலம், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ், 1946. குறுக்கு சாலைகள் தேசிய தகவல் மற்றும் பப்ளிகேஷன்ஸ், 1947.
- சோசலிசமும் சமூகம், சித்தன்னா, 1950.
- இந்தியாவில் பழங்குடியின வாதம், பிரில் அகாடமிக் , 1978 ஐஎஸ்பிஎன் 0706906527 .
- இந்தியாவின் கைவினைப் பொருட்கள் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் மற்றும் புதிய வயது சர்வதேச பப். லிமிடெட், புது தில்லி, இந்தியா, 1995 ஆம் ஐஎஸ்பிஎன் 99936-12-78-2 .
- இந்திய பெண்களின் விடுதலைப் போர்,. தென் ஆசியப் புத்தகங்கள், 1983 , ISBN 0-8364-0948-5 .
- இந்திய தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள், அகில இந்திய கைவினைப் பொருட்கள் வாரியம், 1974.
- இந்திய எம்பிராய்டரி, விலே ஈஸ்டன், 1977.
- இந்தியாவின் கைவினை பாரம்பரியம், பதிப்பகப் பிரிவு, ஐ & பி, அமைச்சகம். இந்தியா, 2000-ம் ஆண்டு ஐஎஸ்பிஎன் 81-230-0774-4 .
- இந்திய கைவினைப் பொருட்கள், நேச பப்ளிஷேர்ஸ் பி. லிமிடெட், மும்பை இந்தியா, 1963.
- இந்திய நாட்டுப்புற நடன மரபுகள்.
- இந்திய கைவினைப் பெருமிதங்கள், புது தில்லி, இந்தியா: கிளாரியன் புக்ஸ், 1985.
- இன்னர் சரிவுகளில், அவுட்டர் இடைவெளி: வரலாறு, 1986 ஐஎஸ்பிஎன் 81-7013-038-7
வெளி இணைப்புகள்
கலைத் துறையிலும் ஆர்வம் கொண்ட ‘பெண் உரிமைப் போராளி’ கமலாதேவி!
மேற்கோள்கள்
- "SNA: List of Sangeet Natak Akademi Ratna Puraskarwinners (Akademi Fellows)".
- Das Bhargavinilayam, Mani Madhaveeyam. biography of Mani Madhava Chakyar, Department of Cultural Affairs, Government of Kerala. 1999. p. 272.
- Mainstream, October 13, 2007
- International Film Festival of India
- Kamaladevi Chattopadhyay at the Internet Movie Database
- Kamaladevi Chattopadhyaya at IGNCA
- "Padma Awards" (PDF).
- Ratna Sadsya Sangeet Natak Akademi website.