கூடியாட்டம்
கூடியாட்டம் என்பது இன்றைய கேரளாவில் வழக்கில் இருக்கும் மிகப் பழைய நாடக வகைகளுள் ஒன்று. இது இன்று சமசுகிருத மொழியில் நடைபெறுகிறது. இந்நாடகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்டதாக நம்பப்படுகின்றது. இது பழங்காலத்தில் கோயில்களில் சடங்காக நிகழ்த்தப்பட்ட கலைவடிவமாகும். கேரளாவின் இக்கலை வடிவத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பரம்பரை பரம்பரையாக வாழ்வழிப் பாட்டன் மூலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கும் மனித குலத்தின் உன்னதமான கலை வடிவம். (Masterpieces of the Oral and Intangible Heritage of Humanity) என்றும் அறிவித்துள்ளது.

நாட்டியாசிரியர் மணி மாதவ சாக்கியாரின் இராமாயணம் நாடகத்தில் இராவணன் வேடம் கொண்டு, தமது 89ஆம் அகவையில் திருபுனித்துரையில் கூடியாட்டம் நாடகம் ஆடுகிறார்
முத்திரைகள்
கூடியாட்டத்தில் 24 முத்திரைகள் உண்டு.அவை,
- சம்யுக்த முத்திரை - இரண்டு கைகளும் பயன்படுத்தப்படும்
- அசம்யுக்த முத்திரை - ஒரு கையால் காட்டப்படும் முத்திரைகள் - எ.கா: விலங்கு, மலர், பெண்
- மிஷ்ர முத்திரை - எ.கா: மாதா, பிதா, குரு
- சமான முத்திரை - எ.கா: அண்மை, சேய்மை

மாதவ சாக்கியர் சிருங்கார அபிநயம் காட்டுதல்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.