பென்டாகார்பனைல் ஐதரிடோ இரேனியம்

பென்டாகார்பனைல் ஐதரிடோ இரேனியம் (Pentacarbonylhydridorhenium) என்பது ReH(CO)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம உலோகச் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் ஒரு வலிமை குறைந்த அமிலமாகும். டையிரேனியம் டெக்காகார்பனைல் (Re2(CO)10) சேர்மத்தின் மிகமுக்கியமான வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. மெத்தனாலில் கரைக்கப்பட்ட புரோமோபென்டா கார்பனைல் இரேனியம்(I) சேர்மக் கரைசலுடன் துத்தநாகம் மற்றும் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தி பென்டாகார்பனைல் ஐதரிடோ இரேனியத்தைக் தயாரிக்கிறார்கள் [1]

Re(CO)5Br + Zn + HOAc → ReH(CO)5 + ZnBrOAc
பென்டாகார்பனைல் ஐதரிடோ இரேனியம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்டாகார்பனைல் ஐதரிடோ இரேனியம்.
இனங்காட்டிகள்
ChemSpider 21106461 Y
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
ReH(CO)5
வாய்ப்பாட்டு எடை 327.265 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 2.30 கி/மி.லி, நீர்மம்
உருகுநிலை
கொதிநிலை 100 °C (212 °F; 373 K) (சிதைவடையும்)
கரையாது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

இச்சேர்மம் ஒரு மிதமான ஒளி உணரியாகும். உலோகத் தொகுதிகள் Re3H(CO)14 உருவாவதால் இச்சேர்மத்தின் மாதிரிகள் மஞ்சள் நிறத்திற்கு மாறுகின்றன.

3 Re(CO)5H → Re3H(CO)14 + H2 + CO

100 பாகை செல்சியசு வெப்பநிலையில் Re2(CO)10 ஆக இது சிதைவடைகிறது:[1]

2 Re(CO)5H H2 + Re2(CO)10.

மேற்கோள்கள்

  1. Michael A. Urbancic, John R. Shapley (1990). "Pentacarbonylhydridorhenium". Inorganic Syntheses 28: 165–8. doi:10.1002/9780470132593.ch43.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.