பென்சைலமின்
பென்சைலமின் (Benzylamine) என்பதுC6H5CH2NH2 வாய்பாடு கொண்ட கரிம சேர்மமாகும். இதில் பென்சைல் குழுவுடன் ஒரு அமைன் வேதி வினைக்குழு இணைந்துள்ளது. நிறமற்ற நீர்மமான இது நீரில் சிறிதளவே கரைகிறது. மெத்தில் அமினைக் காட்டிலும் வலிமை குறைவான காரமான பென்சிலமைன் கரிம தொகுப்பு வினைகளுக்கு பொது முன்னோடியாக விளங்குகிறது.
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-பினைல்மெத்தனமின் | |
வேறு பெயர்கள்
α-அமினோடொலுவீன் | |
இனங்காட்டிகள் | |
100-46-9 ![]() | |
ChEBI | CHEBI:40538 ![]() |
ChEMBL | ChEMBL522 ![]() |
ChemSpider | 7223 ![]() |
DrugBank | DB02464 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C15562 ![]() |
பப்கெம் | 7504 |
வே.ந.வி.ப எண் | DP1488500 |
SMILES
| |
UNII | A1O31ROR09 ![]() |
பண்புகள் | |
C7H9N | |
வாய்ப்பாட்டு எடை | 107.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | weak, நவச்சாரியம்-போன்றது |
அடர்த்தி | 0.981 கி/மிலீ[1] |
உருகுநிலை | |
கொதிநிலை | 185 °C (365 °F; 458 K) |
கலக்கும்[2] | |
கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர் அசிட்டோன் கரையக்கூடியது பென்சீன், குளோரோஃபார்ம் இல் கரையக்கூடியது |
காடித்தன்மை எண் (pKa) | 9.34[3] |
காரத்தன்மை எண் (pKb) | 4.66 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.543 |
கட்டமைப்பு | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.38 D |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றும் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Fischer Scientific |
R-சொற்றொடர்கள் | R21/22 R34[1] |
S-சொற்றொடர்கள் | S26 S36/37/39 S45[1] |
தீப்பற்றும் வெப்பநிலை | 65 °C (149 °F; 338 K) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
அமீன்கள் தொடர்புடையவை |
அனிலின் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
தயாரிப்பு
பென்சைல் குளோரைடை அம்மோனியாவுடன் வினைப்படுத்துவது, பென்சோநைட்ரைலை ஒடுக்குவது, பென்சைல் புரோமைடை அசிட்டமைடுடன் வினைபுரிய வைப்பது, N பென்சைல் தாலமைடை ஐதரசீனுடன்டன் வினை புரிய வைப்பது என்ற பல்வேறு வழிமுறைகளில் பென்சைலமினைத் தயாரிக்கலாம்.
பென்சைல் புரோமைடிலிருந்து
பென்சைல் புரோமைடு மற்றும் ஆல்ககால் கலந்த அம்மோனியாவுடன் வினைபுரியும்போது பென்சைலமின் உருவாகிறது.
- C6H5CH2 – Br + NH3 → C6H5CH2NH2 + HBr
வேதிப்பண்புகள்
அடிப்படைப் பண்புகள்
பென்சைலமின் அமிலத்துடன் வினைபுரிந்து ஒரு உப்பை உருவாக்குகிறது.
- C6H5CH2NH2 + HCl → C6H5CH2NH3+Cl-
நைட்ரசனில் பதிலீடு
என் - ஆல்கைலேற்றம்
பென்சைலமின் ஆல்கைல் ஆலைடுடன் வினைபுரிந்து ஈரிணைய அமீன், மூவிணைய அமீன் மற்றும் குவாடர்னரி அம்மோனியம் உப்பைத்தருகிறது.
- C6H5CH2NH2 + CH2Br → C6H5CH2NHCH3 → C6H5CH2N(CH3)2 → C6H5CH2N(CH3)3Br
என் - அசிட்டைலேற்றம்
அசிட்டைல் குளோரைடு அல்லது அசிட்டிக் அமில நீரிலியுடன் பென்சைலமின் வினைபுரிந்து N-பென்சைல் அசிட்டமைடைத் தருகிறது.
- C6H5CH2NH2 + CH3COCl → C6H5CH2NHCOCH3 + HCl
- C6H5CH2NH2 + (CH3CO)2O → C6H5CH2NHCOCH3 + CH3COOH
நைட்ரசு அமிலத்துடன்
பென்சைலமின் நைட்ரசு அமிலத்துடன் சேர்ந்து பென்சைல் ஆல்ககாலைத் தருகிறது
- C6H5CH2NH2 + HNO2 → C6H5CH2OH
ஆக்சிசனேற்றம்
பொட்டாசியம் பெர்மாங்கனேட்டினால் ஆக்சிசனேற்றமடைந்து பக்கத் தொடரும் அதிலுள்ள அமினோ தொகுதியும் நீக்கமடைந்து பென்சாயிக் அமிலம் உருவாகிறது.
- C6H5CH2NH2 → C6H5COOH
பயன்கள்
N ஆல்கைலேற்றத்தைத் தொடர்ந்து பென்சைலமின் அம்மோனியா தயாரிப்பதற்கான ஆதாரமாக உபயோகிக்கப்படுகிறது. இதில் உள்ள பென்சைல் குழுவை நீரக வேதியியல் மாற்றவினை:[4] மூலமாக நீக்கலாம்.
- C6H5CH2NH2 + 2 RBr → C6H5CH2NR2 + 2 HBr
- C6H5CH2NR2 + H2 → C6H5CH3 + R2NH
ஐதரசன் புரோமைடை ஈர்ப்பதற்கு முதல் படிநிலையாக ஒரு காரம் அல்லது ஆல்கைலேற்ற வினைக்கு உகந்த தொடர்புள்ள அமிலங்கள் பயன்பட்டன.
மேற்கோள்கள்
- Benzylamine at Sigma-Aldrich
- Record in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA)
- Hall, H.K. (1957). J. Am. Chem. Soc. 79 (20): 5441. doi:10.1021/ja01577a030.
- Gatto, V. J.; Miller, S. R.; Gokel, G. W. (1993), "4,13-Diaza-18-Crown-6", Org. Synth., http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv8p0152; Coll. Vol. 8: 152 (example of alklylation of benzylamine followed by hydrogenolysis).