பென்சைல்

கரிம வேதியியலில் பென்சைல் அல்லது பென்சைல் வேதி வினைக்குழு என்பது ஒரு சேர்மத்தில் C6H5CH2- என்னும் கட்டமைப்பு கொண்ட மூலக்கூற்றுப் பகுதி இருப்பதைக் குறிக்கும். அதாவது ஒரு பென்சீன் வளையத்துடன் ஒரு CH2 சேர்ந்திருக்கும். வேதியியல் வாய்ப்பாட்டிலும் மூலக்கூறைக் காட்டும் படங்களிலும் இதனை "Bn" என்றும் குறிப்பதுண்டு. எடுத்துக்காட்டாக பென்சைல் ஆல்ககாலை BnOH என்று சுருக்கமாகக் குறிப்பதுண்டு. இக் குறியீட்டை C6H5C(O)- என்னும் வேதி வினைக்குழுவாகிய பென்சாயில் என்பதன் "Bz" என்னும் குறியீடோடு குழப்பிக்கொள்ளாமல் இருப்பது முக்கியம்.

(பென்சைல் வேதி வினைக்குழு): பென்சைல் தனியுறுப்பு, பென்சைலமின், பென்சைல் புரோமைடு, பென்சைல் குளோரோபார்மேட்டு மற்றும் பென்சைல் மெத்தில் ஈதர். R = பல்லின அணு, அல்கைல், அரைல், அல்லைல் போன்றவை அல்லது பிற பதிலீட்டு குழுக்கள்.
பென்சைல் குழுவின் (benyzl group) அமைப்பு

பென்சைல் என்னும் சொல்லின் பயன்பாடு, கரிம அணு நேரயனியாக்கப்படும் கார்போக்கேசன் வினையாக்கத்தில் ((carbocation))[1] CH2 வேதி வினைக்குழு இணைக்கப்பட்ட பென்சீன் வளையம் பங்குபெறுவதிலும், எதிரயனி (anion) உருவாவதிலும், மின்னூட்டமில்லாத, ஆனால் விரைந்து வேதி வினைப்படும் தனியுறுப்பு (free radical) உருவாக்கத்திலும் வழங்குகின்றது]][2].

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Carey, F. A., and Sundberg, R. J.; Advanced Organic Chemistry, Part A: Structure and Mechanisms, 5th ed.; Springer: New York, NY, 2008. pp 806–808.
  2. Carey, F. A., and Sundberg, R. J.; Advanced Organic Chemistry, Part A: Structure and Mechanisms, 5th ed.; Springer: New York, NY, 2008. pp 312–313.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.