எப்பாக்சைடு

எப்பாக்சைடு (epoxide) என்பது வளையத்தில் மூன்று அணுக்களைக் கொண்ட ஒரு வளைய ஈதர் ஆகும். இந்த வளையம் தோராயமாக, ஒரு சமபக்க முக்கோண வடிவத்தில் உள்ளது. இந்த வடிவத்தின் காரணமாக, மற்ற ஈதர்களோடு ஒப்பிடும் போது, இது மிகுந்த நெருக்கடிக்குள்ளானதாகவும், அதிக வினைத்திறன் கொண்டதாகவும் உள்ளது.

ஈப்பாக்சைடு.

ஈபாக்சி ஈதர்கள் பலவிமான பயன்பாடுகளுக்காக பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. குறைந்த மூலக்கூறு எடை கொண்ட ஈபாக்சைடு நிறமற்றது, முனைவுத்தன்மை அற்றது மற்றும் எளிதில் ஆவியாக்கூடியது ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. Guenter Sienel; Robert Rieth; Kenneth T. Rowbottom (2005), "Epoxides", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a09_531
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.