பெக்தர்

பெக்தர் (மொங்கோலியம்: Бэхтэр; ? - 1180) என்பவர் எசுகெயின் மகன் ஆவார். இவரது தாயார் பெயர் சோச்சிகெல். பிற சில வரலாற்றுக் குறிப்புகளின் படி இவரது தாயார் பெயர் கோவக்ஜின். இவர் செங்கிஸ் கானின் ஒன்றுவிட்ட அண்ணன் ஆவார். எசுகெயின் இறப்பிற்குப் பிறகு, தெமுசின், அவரது தாயார் ஓவலுன், அவரது உடன்பிறந்தவர்கள் மற்றும் இரண்டு ஒன்றுவிட்ட சகோதரர்கள் (பெக்தர் உட்பட) அவர்களது இனத்தால் கைவிடப்பட்டனர், தங்களைத் தாமே தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். இயற்கையாய் கிடைத்த உணவுகளை உண்டு அவர்கள் உயிர் வாழ்ந்தனர். எனினும் மூத்த ஒன்றுவிட்ட சகோதரர்கள், 14 வயது தெமுசினும் அவரது சகோதரர் கசரும் சேகரித்த உணவை எடுத்துக் கொண்டனர். தெமுசினும் கசரும் பின்தொடர்ந்து பெக்தரைக் கொன்றனர். இதற்காக ஓவலுன் அவர்களைத் திட்டினார். பெக்தர் என்ற ஒர்கோன் துருக்கிய வார்த்தைக்கு "கவசம்" என்று பொருள்.

பரம்பரை

ஓவலுன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எசுகெய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
போர்த்
 
தெமுசின் (செங்கிஸ் கான்)
 
கசர்
 
கச்சியுன்
 
தெமுகே
 
பெலகுதை
 
பெக்தர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சூச்சி
 
 
சகதை கான்
 
 
 
ஒகோடி
 
 
டொலுய்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.