ஓவலுன்

ஓவலுன் (Hoelun) என்பவர் கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் தலைவரான எசுகெயின் மனைவி ஆவார். இவரே செங்கிஸ் கானின் தாய் ஆவார். இவரது வாழ்க்கையைப் பற்றிய தற்போதைய தகவல்களானது மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றில் இருந்து வருகிறது.

மங்கோலியர்களின் இரகசிய வரலாறின் 1908ம் ஆண்டு சீன மறு-பதிப்பின் வடிவமைப்பு: எசுகெய், சிலேதுவின் மனைவியான ஓவலுனை (தெமுசினின் எதிர்காலத் தாய்) கடத்துகிறார். மங்கோலிய உரைமூலத்தின் எடுத்தெழுதிய சீனப் பொருள். வலப்பக்கம் சிறிய எழுத்துகளுடன் சீன மொழி அருஞ்சொற்பொருள்.

ஆரம்ப வாழ்க்கை

ஓவலுன், ஓலகோனுடு பழங்குடியினத்தில் பிறந்தார். இவர் மெர்கிடு கூட்டமைப்பின் சிலேதுவிற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தார். ஆனால் கி.பி. 1159ல், இவரது திருமணத்திற்கு பிறகு, மீண்டும் மெர்கிடு முகாமுக்குச் செல்லும் வழியில் எசுகெயால் கடத்தப்பட்டார். எசுகெய் ஓவலுனைத் தன் மூத்த மனைவியாக்கினார். இது ஒரு மரியாதை ஆகும். ஏனென்றால் மூத்த மனைவி மட்டுமே அவரது வாரிசுகளைப் பெற்றெடுக்க முடியும். இவர் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார். தெமுசின் (இவரே பின்னர் செங்கிஸ்கான் என அழைக்கப்பட்டார்), கசர், கச்சியுன், தெமுகே என நான்கு மகன்கள், தெமுலுன் என ஒரு மகள். எசுகெயிக்குச் சோச்சிகல் என இரண்டாம் மனைவி இருந்தார். ஆனால் இவரைத் தான் எசுகெய் முதலில் திருமணம் செய்தார். இவர்களுக்கு பெக்தர் மற்றும் பெலகுதை என இரண்டு மகன்கள் இருந்தனர்.

மேலும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.