எசுகெய்
எசுகெய் பகதூர் அல்லது எசுகெய் (நவீன மொங்கோலியம்: Есүхэй баатар, யெசுகெய் பாடர்; இறப்பு 1171), கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவராகவும், தெமுஜினின் (பின்னாளில் செங்கிஸ் கான் என அறியப்பட்டவர்) தந்தையாகவும் அறியப்படுபவர்.[1] இவர் போர்சிசின் குடும்பத்தில் பிறந்தார், இவருடைய பெயருக்கு "ஒன்பது போல" என்று அர்த்தம், அதாவது அவர் மங்கோலியர்களின் அதிர்ஷ்ட எண்ணான ஒன்பது இலக்கத்தின் மிகச்சிறந்த குணங்களைப் பெற்றுள்ளார் என்று அர்த்தம்.


வாழ்க்கை
எசுகெய் ஜின் வம்சத்தால் ககானாக அறிவிக்கப்பட்ட காபூல் கானின் இரண்டாவது மகனான பர்டன் பாகதூரின் மகன் ஆவார். காபூல் கான், முதன் முதலில் மங்கோலியர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்த கைடுவின் பேரன் ஆவார். யெசுகெய் தனது முதல் மனைவி சோச்சிகல் மூலம் இரு குழந்தைகளைப் பெற்றார்: பெக்டெர் மற்றும் பெல்குடெய். மங்கோலியர்களின் இரகசிய வரலாறு பதிவின்படி இளம் தெமுஜின் அவரது சகோதரர் பெக்டெரை வேட்டையாடும்போது கொன்றார். ஆனால் அவரது மற்றொரு ஒன்றுவிட்ட சகோதரன், பெல்குடெய், ஒரு நல்ல நண்பனாக இருந்தார், பின்னர் செங்கிஸ் கானுக்குக் கீழ் ஒரு தளபதியாகப் பணியாற்றினார். எசுகெய்யின் இரண்டாவது மற்றும் தலைமை மனைவி ஹோயேலுன், ஓலகோனுட் வன மக்களின் ஒரு மகள் ஆவார். ஹோயேலுனை அவரது புதிய கணவர் சிலேடுவிடமிருந்து, எசுகெய் அவரது மூத்த சகோதரர் நெகுன் டைஜி மற்றும் இளைய சகோதரர் டரிடை ஒட்சிஜின் உதவியுடன் கடத்தினார்.
குடும்பம்
ஓவலுன் | எசுகெய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
போர்த் | தெமுசின் (செங்கிஸ் கான்) | கசர் | கச்சியுன் | தெமுகே | பெலகுதை | பெக்தர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சூச்சி | சகதை கான் | ஒகோடி | டொலுய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உசாத்துணை
- W. Mote, Frederick. Imperial China 900-1800. பக். 414. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-01212-7. https://books.google.co.in/books?id=SQWW7QgUH4gC&pg=PA414&dq=yesugei&hl=en&sa=X&ved=0ahUKEwitkIy4pYfYAhWIqY8KHYBcAKIQ6AEIWDAI#v=onepage&q=yesugei&f=false.