முப்புரி நூல்

முப்புரிநூல் சில சாதிகளில் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வழியே உடலின் குறுக்கே அணியும் மூன்று பிரிகளைக்கொண்ட பருத்தி நூலாலான மாலையாகும். நூல்களை இணைக்கும் முடிச்சில் மஞ்சள் தடவி இருக்கும். இச்சாதி சிறுவர்களுக்கு உபநயனம் செய்து இந்நூலை அணிவிப்பர்.

தக்கோலம் கோவிலில் உள்ள பூணூல் அணிந்திருக்கும் திருமால் சிற்பம்

யஜ்ஞோபவீதம் என்றும் பூணூல் என்றும் அழைக்கப்படுகிறது.

தோற்றம்

பிரம்மா பருத்தி செடியிலிருந்து முப்புரி நூலை தோற்றுவித்தார். [1]

மூன்று புரிகளுக்கான காரணம்

பூணூலில் இருக்கும் மூன்று புரிகள், காயத்திரி(மனம்),சரசுவதி(வாக்கு),சாவித்திரி(செய்கை) தேவியரைக் குறிக்கும். இதன் மூலம் பூணூலை அணிபவர் மனம், வாக்கு மற்றும் செய்கையில் தூய்மையுடன் இருக்க எந்நேரமும் நினைவுறுத்தப்படுகிறார்.

அணியும் முறை

சடங்குகள் செய்யும்போது பூணூல் மூன்று விதமாக அணியப்படுகிறது:

  1. நேர்முறை - வழமையான முறையில் இடது தோளிலிருந்து வலது கைப்புறம் அணிதல்....கடவுளருக்கு வழிபாடுகள் செய்யும்போது.
  2. மாலையாக - கழுத்து வழியே நெஞ்சின் மீது மாலையாக அணிதல் - இருடிகளுக்கு தர்ப்பணம் கொடுக்கையில், உடலுறவு கொள்கையில் மற்றும் இயற்கை கடன்களை கழிக்கும்போது.
  3. எதிர்மறையாக - வலது தோளிலிருந்து இடது கைப்புறம் அணிதல் - இறந்தவர்களுக்கு கருமாதி செய்கையில், திவசம் கொடுக்கையில்
உபநயனம் நிகழ்வு

உபநயனம் போது ஓர் நூல்பிரியே அணிவிக்கப்படுகிறது. பின்னர் திருமணத்தின் போது இரண்டாவதும் பிள்ளை பிறந்தபின் மூன்றாவதும் அணியப்படுகிறது. உலகில் தனது கடமைகளை அவனுக்கு நினைவுறுத்திய வண்ணம் இருக்க இவ்வாறு செய்யப்படுகிறது.

இழைகளின் எண்ணிக்கையும் அணியும் காலமும்

  1. பிரம்மச்சாரியாக இருக்கும் போது தனக்கென ஜபம் செய்ய கல்வியறிவு பெற ஒரு பூணூல் அணிகிறார்கள். ஒரு பூணுல் என்பது மூன்று இழைகளையுடையது.
  2. திருமணமான பிறகு தனது மனைவிக்காகவும் குடும்பத்திற்காகவும் ஜபம் வழிபாடு செய்வதற்காக இரண்டு பூணூல் அணிகிறார்கள். இரு பூணூல் என்பது ஆறு இழைகளையுடையது.
  3. சிவதீட்சை அல்லது வைணவ முத்ராதானம் பெறுகின்றவர்கள் மட்டும் மூன்று பூணூலை அணிகிறார்கள். இது ஒன்பது இழைகளையுடையதாகும்.[2]

கட்டுப்பாடு

பூணூல் அணிவிக்கப்பட்ட ஒருவர் அதனை தன் வாழ்நாள் முழுவதும் கழற்றாது அணிந்திருத்தல் வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டம் நாளில் பழையது களைந்து புதியது அணிய வேண்டும். .

மண்டல வேறுபாடுகள்

#மொழிஉபநயனம்பூணூல்
1சமசுகிருதம்உபநயனம்
उपनयनम्
யக்ஞோபவீதம்
यज्ञोपवितम्
2மலையாளம்உபநயனம்
ഉപനയനം
பூணூல்
പൂണൂല്‍
3தமிழ்பூணூல் அணிவித்தல்
பூணல்
பூணூல்
பூணல்
4தெலுங்குஒடுகு,உபநயனம்
ఒదుగు,ఉపనయనము
ஜந்த்யமு
జంధ్యము
5கன்னடம்முஞ்சி
ಮುಂಜಿ
ஜானிவார
ಜನಿವಾರ
6இந்திஜனேயு
जनेऊ
ஜனேயு
जनेऊ
7மராத்திமுஞ்சா
मुंज
ஜானவே
जानवे
8கொங்கணிமுஞ்ச்,முஞ்சி
मुंज,ಮುಂಜಿ
ஜனவே,ஜன்னுவே
जानवें,ಜಾನುವೆ
9வங்காளம்உபொன்யொன்
উপনয়ন
பௌத்தெ
পৈতে
10ஒரியாப்ரத கரா
ବ୍ରତଘର
பொய்தா
ପଇତା
11நேபாளிப்ராத்பந்தா
ब्रतबंध
ஜனய்
जनई
12காசுமீரிமேகல்
معخل,मेखल
யோன்யா
يoنيآ,योनया
13அசாமிலகுன்தொனி
লগুনদেওনি
லகுன்
লগুন
14துளுஉபநயன
ಉಪನಯನ
ஜனிவார
ಜನಿವಾರ
15குசராத்தியக்னோபவீத்
યજ્ઞોપવિત
ஜனோய்
જનોઈ
16பஹாரிஜனெயு
जनेयु
ஜனெயு
जनेयु
17சிந்திஜன்யா
जानया
ஜன்யா
जानया


காண்க

பிராமணர்கள்

ஆதாரம்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=11024
  2. தினமலர் ஆன்மிக தகவல்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.