உபநயனம்

இந்து சமயத்தில் ஒரு சில பிரிவினர் தம் சிறுவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் விழா உபநயனம் (ஒலிப்பு ) என அழைக்கப்படுகிறது. இந்த சடங்கிற்கு பூணூல் கல்யாணம், பூணூல் திருமணம் போன்ற வேறு பெயர்களும் உள்ளன.

உபநயனம் செய்து கொள்ளும் சிறுவம் அரச மர குச்சியை ஏந்தி தனது பிரம்மச்சரியத்தினை ஏற்றல்

இந்த நேரத்தில் அவர்கள் வாழ்வின் இரகசியம் என கருதும் காயத்திரி மந்திரத்தை அவனது தந்தை, தாயின் முன்னிலையில், ஓதி கற்றுக்கொடுக்கிறார். இது பிரம்மோபதேசம் என வழங்கப்படுகிறது.

இவ்வாறு உபநயனம் செய்விக்கப்பட்ட சிறுவன் பிரம்மச்சாரி என அழைக்கப்படுகிறான். நாளும் மூன்றுவேளை சந்தியாவந்தனம் என கதிரவனுக்கு அதிகாலை,காலை மற்றும் மாலை நேரங்களில் வழிபாடு செய்து காயத்திரி மந்திரம் செபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறான்.[1]

உபநயன சடங்கு இல்லாதவர்களுகள் பன்டைய காலத்தில் குருகுலத்தில் கல்வி பயில இயலாது.

மனுச்சட்ட ஆட்சி முறையின் சாதிய வெளிப்பாடாக இச்சடங்குகளை கருதுவோரும் எதிர்ப்பாரும் உளர்.[2]

ஆதாரங்கள்

  1. ரிசிகேசு, (2008). "உபநயனம்",தவம் (நியூ ஆரிசன் மீடியா லிட்), ISBN 978-81-8368-883-3
  2. குமரிமைந்தன், "சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை" திண்ணை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.