புலி (திரைப்படம்)
புலி (Puli) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் மிகுபுனைவுத் திரைப்படமாகும். சிம்புதேவன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜய், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா மோட்வானி, சுருதி ஹாசன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகர் விஜயின் உறவினரான செல்வகுமார் தயாரித்த இத்திரைப்படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.[1] இப்படத்தின் படப்பிடிப்பு 2014 நவம்பர் மாதத்தில் தொடங்கியது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வருவாய் ஈட்டாமல் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு சுமார் 50 முதல் 60 கோடி வரை நஷ்டத்தை உண்டாக்கி பிரம்மாண்ட தோல்வியை சந்தித்தது.
புலி | |
---|---|
![]() | |
இயக்கம் | சிம்புதேவன் |
தயாரிப்பு | செல்வகுமார் சிபுஜி கே. தமீன் |
கதை | சிம்புதேவன் |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | விஜய் சுதீப் ஸ்ரீதேவி சுருதி ஹாசன் ஹன்சிகா மோட்வானி பிரபு |
ஒளிப்பதிவு | நடராஜன் சுப்ரமணியம் |
படத்தொகுப்பு | ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் | எஸ். கே. டி. ஸ்டுடியோஸ் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 120 கோடி |
மொத்த வருவாய் | 64 கோடி |
நடிகர்கள்
- விஜய்
- சுதீப்
- ஸ்ரீதேவி
- சுருதி ஹாசன்
- ஹன்சிகா மோட்வானி
- பிரபு
- தம்பி ராமையா
- நந்திதா
- ஜோ மலூரி
- அஜய் ரத்னம்
- சத்யன்
- கருணாஸ்
- இமான் அண்ணாச்சி
- ரோபோ சங்கர்
- வித்யுலேகா ராமன்
- ஜாஸ்பர்
பாடல்கள்
Untitled |
---|
இத்திரைப்படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
எண் | தலைப்பு | பாடலாசிரியர் | பாடகர் | நீளம் |
---|---|---|---|---|
1. | "புலி புலி" | வைரமுத்து | மனோ, பிரியதர்சினி | 4.34 |
2. | "ஏண்டி ஏண்டி" | வைரமுத்து | விஜய், சுருதி ஆசன் | 4.11 |
3. | "சிங்கிலியா சிங்கிலியா" | வைரமுத்து | யாவீது அலி, பூசா ஏ. வி. | 4.23 |
4. | "சொட்ட வால" | வைரமுத்து | சங்கர் மகாதேவன், எம். எம். மானசி | 4.08 |
5. | "மனிதா மனிதா" | வைரமுத்து | திப்பு | 3.45 |
6. | "மன்னவனே மன்னவனே" | வைரமுத்து | சின்மயி, சூரச்சு சந்தோசு, எம். எல். ஆர். கார்த்திகேயன் | 5.25 |
7. | "புலி விளம்பரப் பாடல்" | தேவி சிறீ பிரசாத் | தேவி சிறீ பிரசாத் | 2.03 |
மொத்த நீளம்: |
28.18 |
வெளியீடு
இப்படத்தின் பாடல்கள் ஒலிபரப்பு உரிமையைச் சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியது.[2]
மேற்கோள்கள்
- http://www.indiaglitz.com/puli-is-a-grand-film-and-so-are-the-songs--dsp-tamil-news-122760
- "Puli in the lines of Vijay's thalaiva". Behindwoods.com. பார்த்த நாள் 9 March 2015.