புனைபெயர்

புனைபெயர் (Pseudonym, Pen name) என்பது ஓர் எழுத்தாளர் தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் பெயர். ஒரு படைப்பாளி ஏதோ ஒரு காரணத்திற்காக தனது உண்மையான பெயரைப் பயன்படுத்தாமல் வேறு ஒரு பெயரில் தனது படைப்புகளை வெளியிடலாம். தனிமனிதர்கள் மட்டுமல்லாமல் குழுக்களும் புனைபெயரில் தங்கள் படைப்புகளை வெளியிடலாம். தங்கள் உண்மை அடையாளத்தை வெளிக்காட்ட விரும்பாமை, கவர்ச்சியான பெயர்கள் மூலம் நுகர்வோரின் கவனத்தை ஈர்த்தல் போன்றவை புனைப்பெயர் பயன்படுத்தப்படும் காரணங்களுள் சில.

புனைபெயர் பட்டப்பெய‌ரன்று. பட்டப்பெயர் என்பது வேறு ஒருவரால் வைக்கப்படுவது. (எ.கா- பாரதி) புனைபெயர் சிறப்புப்பெயரும் அன்று. சங்க இலக்கியத்தில் இருந்த சில பாடல்களை எழுதியவரின் பெயர் தெரியாததால் பாடலிலிருந்து அழகிய உவமையைக் கொண்டு பெயரிடும் மரபு இருந்தது.

சில எழுத்தாளர்களின் இயற்பெயரும் புனைபெயரும்
இயற்பெயர்புனைபெயர்
முத்தையாகண்ணதாசன்
கனகசுப்புரத்தினம்பாரதிதாசன்
ரெங்கராஜன்சுஜாதா
வே. சங்கரன்ஞாநி (எழுத்தாளர்)
கி. பழனிச்சாமிஞானி (எழுத்தாளர்)
சொ. விருத்தாச்சலம்புதுமைப்பித்தன்
மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார்மதன்
ராஜகோபால்சுரதா
ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோபாப்லோ நெருடா
அகிலாண்டம்அகிலன்
மனோகரன்எஸ். வி. இராசதுரை
வேணுகோபாலன்புஷ்பா தங்கதுரை
லெ. இராமநாதன்தமிழ்வாணன்
விஜயரங்கம்தமிழ்ஒளி
தியாகராஜன்சின்னக்குத்தூசி
இராம. லெட்சுமணன்லேனா தமிழ்வாணன்
ம. லெட்சுமணன்மணா
வேங்கட கிருஷ்ணன்கிருஷ்ணா டாவின்சி

புதுமைப்பித்தன், கண்ணதாசன் போன்ற சில எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட புனைபெயர்‌களில் எழுதி வந்தனர்.

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.