ஞானி (எழுத்தாளர்)

ஞானி (பிறப்பு: சூலை 1, 1935) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர், கவிஞர்.

இந்தக் கட்டுரை கோவையைச் சேர்ந்த எழுத்தாளரைப் பற்றியது. அரசியல் விமர்சகருக்கு, ஞாநி (எழுத்தாளர்) என்பதைப் பாருங்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரில் பிறந்த இவரது இயற்பெயர் கி. பழனிச்சாமி. இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வருபவர். முன்பு தமிழாசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்று, தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். மார்க்சிய ஆய்வாளரான எஸ். என். நாகராஜனின் வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.

ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான வானம்பாடி இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருது

இவர் எழுதிய “மார்க்சியம் பெரியாரியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]

நூல்கள்

திறனாய்வு நூல்கள்

  • மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் - 1988
  • தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் - 1994
  • எண்பதுகளில் தமிழ் நாவல்கள் - 1994
  • படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் -
  • தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் - 1997
  • நானும் என் தமிழும் - 1999
  • தமிழன் வாழ்வும் வரலாறும் - 1999
  • தமிழில் படைப்பியக்கம் - 1999
  • மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் - 2001
  • எதிர் எதிர் கோணங்களில் - 2002
  • மார்க்சிய அழகியல் - 2002
  • கவிதையிலிருந்து மெய்யியலுக்கு - 2002
  • தமிழ் தமிழர் தமிழ் இயக்கம் - 2003
  • தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் - 2004
  • வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் - 2004
  • தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் - 2005
  • தமிழன்பன் படைப்பும் பார்வையும் - 2005
  • வள்ளுவரின் அறவியலும் அழகியலும் - 2007
  • தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் - 2008
  • நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் - 2009
  • செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் - 2010
  • தமிழிலக்கியம் இன்றும் இனியும் - 2010
  • வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - 2011
  • ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் - 2012
  • அகமும் புறமும் புதுப்புனல் - 2012
  • அகமும் புறமும் தமிழ்நேயம் - 2012
  • ஞானியின் எழுத்துலகம் - 2005
  • ஞானியோடு நேர்காணல் - 2012

மெய்யியல்

  • மார்க்சியத்திற்கு அழிவில்லை - 2001
  • மார்க்சியமும் மனித விடுதலையும் - 2012
  • இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் - 1975
  • மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு - 1976
  • கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை - 1996
  • நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் - 2006

கவிதை நூல்கள்

  • கல்லிகை - 1995
  • தொலைவிலிருந்து - 1989
  • கல்லும் முள்ளும் கவிதைகளும் - 2012

தொகுப்பு நூல்கள்

  • தமிழ்த் தேசியம் பேருரைகள் - 1997
  • அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் - 1997
  • மார்க்சியத்தின் எதிர்காலம் - 1998
  • படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் - 1999
  • மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள் - 1999
  • விடுதலை இறையியல் - 1999
  • இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் - 2000
  • மார்க்சியம் தேடலும் திறனாய்வும் - 2000
  • நிகழ் நூல் திறனாய்வுகள் 100 - 2001
  • பெண்கள் வாழ்வியலும் படைப்பும் - 2003

அடிக்குறிப்புகள்

  1. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.