பெயர் மாற்றம்

பெயர் மாற்றம் (name change) என்பது அடிப்படையில் ஒருவருக்கு பிறப்பின் போது இட்ட பெயரை பின்னாளில் மாற்றத்திற்குள்ளாக்கும் அல்லது வேறு பெயரைப் பதிவு செய்யும் உத்தியாகும்.

பெயர் மாற்றம் செய்யும் அடிப்படைச் சட்டம் பொதுவாக அனைத்து நாடுகளின் சட்ட முறைமைகளில் ஒருவர் தன் பெயரை சட்டப்பூரவமாக மாற்றிக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியாகும். இவர் பிறப்பின் பொழுது, திருமணத்தின் பொழுது, தத்துஎடுத்தலின் பொழுது கொடுக்கப்பட்ட பெயரிலிருந்து தன் பெயரை மாற்றிக்கொள்ள வழி வகுக்கின்றது. அவர் வாழிடம் சார்ந்த இடங்களில் இந்த மாற்றங்கள் நடைபெறுவதற்கு ஏதுவான இடமாகும். பொதுச் சட்டத்தில் இதற்கான நீதிமுறைமை, வரைமுறைகள் இலகுவாக்கப்பட்டுள்ளன. ஆனல் உரிமையியல் சட்டத்தில் இதன் நீதிமுறைமை வரையரைகள் சற்று கட்டுப்பாடுகள் கொண்டவை.

உரிமையியல் சட்டம்

பொதுவாக பெயர் மாற்றத்தில் உரிமையியல் சட்டம் பின்பற்றுகின்ற நாட்டில் பொதுச்சட்டத்தை பின்பற்றுகின்ற நாடுகளைப் போல் அல்லாமல் இதன் நீதிமுறைமைகள் வேறுபட்டிருக்கின்றன. பெயர் மாற்றத்தின் பொழுது அரசின் ஒப்புகை கோரப்படுகின்றது. அப்படி கோரப்பட்டாலும் ஏப்பொழுதாவது அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த முறை பின்பற்றுவதற்கான காரணம் பொதுமக்களின் நன்மைக் கருதி அவர்கள் தனிச்சிறப்புடன் அடையாளம் காணக்கூடியப் பெயர்கள் உதாரணமாக அரசாங்கப் பதிவேடுகள், அவர்களை அடையாளப்படுத்தக்கூடிய வருகைப்பதிவேடுகள், தனி அடையாள எண்கள், நியாயமான, விவேகமான புணராலோசணைத் தேவைக்காக இம்முறை பின்பற்றப்படுகின்றது.

பெயர் மாற்ற நோக்கங்கள்

  • திருமணத்தின் பின் நேரடியாகவே சட்ட ரீதியாக பெயர் மாற்றதிற்குள்ளாகின்றது. ஆயினும் சிலர் தமது குடும்பப் பெயர் நிலைப்பதற்காக அதனையும் சேர்த்துவைத்திருப்பர். எ.கா: இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க.
  • தத்தெடுத்தலின் போது வளர்ப்புத் தந்தையின் பெயரை இடுவதற்கான சட்ட அனுமதி.
  • தனது மதப் பின்பற்றல்களை மாற்றுகின்ற ஒருவர் அதற்கேற்ப பெயரை மாற்றுதல்.
  • பெயரிலுள்ள இன,சாதி அடையாளத்தினை மறைப்பதற்காக பெயரை மாற்றுதல்.
  • எழுத்துத்தறை முதலானவற்றில் உள்ளவர்கள் பிரபல்ய நோக்கில் செய்யும் பெயர் மாற்றம்.
  • சோதிட நோக்கிலான பெயர் மாற்றம்
  • பழைய பெயர், அழகற்ற பெயர், பொருளற்றபெயர், என்பவற்றுக்காக மாற்றுதல்.

நன்கறியப்பட்ட பெயர்மாற்றங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.