மிண்டி காலிங்

வேரா சொக்கலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட மிண்டி காலிங் (Mindy Kaling) இந்தியத் தமிழ் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க நாடக நடிகை, எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். என்.பி.சி நிறுவனத்தின் "தி ஆபீஸ்" நாடகத்தில் கெல்லி கபூர் எனும் பாத்திரம் மூலம் பரவலாக அறியப்படுபவர். இவரது தந்தை கட்டுமான பொறியாளர், தாய் மகப்பேறு மருத்துவர். இவரது பெற்றோர்கள் நைஜீரியாவுக்கு வேலை நிமித்தமாக புலம் பெயர்ந்து சென்றவர்கள். பின்னாளில், அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு 1979 ஆம் ஆண்டு குடி பெயர்ந்தது. இவருக்கு விஜய் என்கிற மூத்த சகோதரர் உள்ளார்.

மிண்டி காலிங்
2008 இல் மிண்டி காலிங்
பிறப்புவேரா மிண்டி சொக்கலிங்கம்
சூன் 24, 1979 (1979-06-24)
கேம்பிரிட்ஜ், மசாச்சுசேட்ஸ், அமெரிக்கா
பணிநடிகை, நகைச்சுவையாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2004–நடப்பு

கல்லூரி படிப்பு முடித்தபின், காலிங் நியூ யார்க் மாகாணத்தில் உள்ள ப்ரூக்ளின் நகரத்தில் குழந்தைகள் காப்பாளராகவும், உதவி தயாரிப்பளாரகவும் வேலை செய்தார். தனது கடைசி பெயரான சொக்கலிங்கம் என்பதை காலிங் என மாற்றிக்கொண்டார். அவரது கல்லூரித் தோழி பிரெண்டவிதர்ஸ் (Brenda Withers) உடன் இணைந்து எழுதிய "Matt&Ben" நாடகத்தின் மூலம் "தி ஆபீஸ்" நாடகத்தில் நடிக்க மற்றும் எழுதும் வாய்ப்பை பெற்றார். அன்றைய வருடத்தில் சிறந்த பத்து திரையரங்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக "டைம்" பத்திரிக்கை இந்த நாடகத்தை தேர்ந்தெடுத்தது. அவரது நகைச்சுவை உணர்வு அவரின் தாயிடம் இருந்து வந்தாக நினைக்கிறார்.

இவரது வாழ்க்கை வரலாற்றை "இஸ் எவரிவன் ஹேங்கிங் வித்தவுட் மி? (அண்ட் அதர் கன்சென்ஸ்)" எனும் நூலாக எழுதி வெளியுட்டுள்ளார்.

எழுதிய உட்கதைகள்

தலைப்பு தேதி பருவம்
ஹாட் கேர்ள் ஏப்ரல் 26, 2005 1
தி டுண்டீஸ் செப்டம்பர் 20, 2005 2
தி இஞ்சுரி ஜனவரி 12, 2006 2
டேக் யுவர் டாட்டர் டு வொர்க் டே மார்ச் 16, 2006 2
தீவாளி நவம்பர் 2, 2006 3
பென் பிராங்க்ளின் பெப்ரவரி 1, 1, 2007 3
பிரான்ச் வார்ஸ் நவம்பர் 1, 2007 4
நைட் அவுட் ஏப்ரல் 24, 2008 4
ஃப்ரேம் டோபி நவம்பர் 20, 2008 5
லெக்சர் சர்க்யுட்: பகுதி 1 பெப்ரவரி 5, 2009 2
லெக்சர் சர்க்யுட்: பகுதி 2 பெப்ரவரி 12, 2009 5
கோல்டன் டிக்கெட் மார்ச் 12, 2009 5
நயாகரா-கிரேக் டேனியல்ஸ் உடன் சேர்ந்து எழுதியது அக்டோபர் 8, 2009 6
சீக்ரெட் சென்டா டிசம்பர் 10, 2009 6
தி மேனேஜர் அண்ட் தி சேல்ஸ்மேன் பெப்ரவரி 11, 2010 6
செக்ரெடரியின் டே ஏப்ரல் 22, 2010 6
தி ஸ்டிங் அக்டோபர் 21, 2010 7
கிளாசி கிறிஸ்துமஸ் டிசம்பர் 9, 2010 7
மைக்கேலின் லாஸ்ட் டுண்டீஸ் ஏப்ரல் 21, 2011 7
கிறிஸ்துமஸ் விஷஸ் ஏப்ரல் 21, 2011 8

இயக்கிய உட்கதைகள்

தலைப்பு தேதி பருவம்
பாடி லாங்குவேஜ் ஏப்ரல் 29, 2010 6
மைக்கேலின் லாஸ்ட் டுண்டீஸ் ஏப்ரல் l 21, 2011 7

இவை தவிர சில ஹாலிவுட் திரைபடங்களில் குறும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இவற்றில் குறிப்பிட தக்கவை "தி 40 இயர் ஓல்ட் விர்ஜின்", "அன்அக்கம்பநிடு மைனர்", "நைட் அட் தி மிசியாம் : பெட்டல் அப் தி ஸ்மித்சோனியன்".

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.