புதுச்சேரி மக்களவைத் தொகுதி

புதுச்சேரி மக்களவைத் தொகுதி (Puducherry Lok Sabha constituency), இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.[1]

எல்லைகள்

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை இணைந்தது புதுச்சேரி ஒன்றியம். புதுச்சேரி ஒன்றியத்தை 30 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். புதுச்சேரி ஒன்றியம் முழுவதும் இந்த மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஆண்டுபொதுத் தேர்தல்பதிவான வாக்குகள்வெற்றிபெற்ற கட்சிஉறுப்பினர்
19674வது மக்களவை63,286இந்திய தேசிய காங்கிரசுஎன்.சேதுராமன்
19715வது மக்களவை1,12,714இந்திய தேசிய காங்கிரசுமோகன் குமாரமங்கலம்
19775வது மக்களவை1,12,714அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அரவிந்த பால பிரஜனர்
19807வது மக்களவை1,64,589இந்திய தேசிய காங்கிரசுப. சண்முகம்
19848வது மக்களவை1,59,376இந்திய தேசிய காங்கிரசுப. சண்முகம்
19899வது மக்களவை1,90,562இந்திய தேசிய காங்கிரசுப. சண்முகம்
199110வது மக்களவை2,07,922இந்திய தேசிய காங்கிரசுஎம்.ஓ.எச்.பரூக்
199611வது மக்களவை1,83,986இந்திய தேசிய காங்கிரசுஎம்.ஓ.எச்.பாரூக்
199812வது மக்களவை1,31,348திராவிட முன்னேற்றக் கழகம்எஸ்.ஆறுமுகம்
199913வது மக்களவை1,65,108இந்திய தேசிய காங்கிரசுஎம்.ஓ.எச்.பரூக்
200414வது மக்களவை4,83,814பாட்டாளி மக்கள் கட்சிபேராசிரியர் எம். ராமதாஸ்
200915வது மக்களவை6,07,948இந்திய தேசிய காங்கிரசுவி. நாராயணசாமி
201416வது மக்களவை7,40,017அகில இந்திய என். ஆர் காங்கிரஸ்இரா. ராதாகிருஷ்ணன்
201917வது மக்களவை-காங்கிரஸ்வைத்தியலிங்கம்

14வது மக்களவை தேர்தல்

பேராசிரியர் ராமதாஸ் (பாமக) பெற்ற வாக்குகள் - 241,653

லலிதா குமாரமங்கலம் (பாரதிய ஜனதா கட்சி) பெற்ற வாக்குகள் - 172,472

வெற்றி வேறுபாடு: 69,181 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

28 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் நாராயணசாமி பாமகவின் பேராசிரியர் எம்.ராமதாசை 91,772 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
நாராயணசாமி காங்கிரசு 300,391
பேராசிரியர் ராமதாசு பாமக 208,619
ஆசனா தேமுதிக 52,638
எம். விஸ்வேஸ்வரன் பாரதிய ஜனதா கட்சி 13,442
எம். சௌந்தரம் பகுஜன் சமாஜ் கட்சி 3,697

மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம் [2]

16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

2014 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றது அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ். மேலும் அப்போது கூட்டணியில் இருந்த தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளின் துணையோடு அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.

ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதன் மூலம், நாடாளுமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த மாநில கட்சியின் முதல் உறுப்பினர், என்ற பெருமையைப் பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ராதாகிருஷ்ணன் என் ஆர் காங்கிரஸ் 2,55,826
நாராயணசாமி காங்கிரசு 1,94,972
எம். வி. ஓமலிங்கம் அதிமுக 1,32,657
ஏ. எம். எச். நாஜிம் திமுக 60,580
அனந்தராமன் பாமக 22,754
விஸ்வநாதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 12,709

மேற்கோள்கள்

  1. "பொது தேர்தல் 2014 >> தொகுதி - புதுச்சேரி". பார்த்த நாள் 29 அக்டோபர் 2014.
  2. http://eci.nic.in/

வெளியிணைப்புகள்

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.