பிராட்வே

பிராட்வே அல்லது பிரகாசம் சாலை (சென்னை) (Broadway, Chennai) இந்திய விடுதலை இயக்க வீரரான த. பிரகாசம் நினைவாக பெயரிடப்பட்ட பிரகாசம் சாலையைக் குறிக்கும். இச்சாலை வடக்கு- தெற்காக பழைய சிறைச்சாலை, சைனா பஜார் மற்றும் ஜார்ஜ் டவுன் வழியாக ஒரு மைல் நீளத்திற்கு செல்கிறது.

பிராட்வே
பிரகாசம் சாலை
பராமரிப்பு :சென்னை மாநகராட்சி
நீளம்:1.05 மைல்
தெற்கு முனை:சைனா பஜார் சாலை, ஜார்ஜ் டவுன், பிராட்வே பேருந்து நிலையம் (சென்னை)
வடக்கு முனை:பழைய சிறை வீதி/இப்ராகிம் சாகிப் தெரு, சென்னை

பிரகாசம் சாலை, முதலிப்பேட்டையையும் பெத்தன்னநாயக்கன் பேட்டையையும் இரண்டாக பிரிக்கிறது. பிரகாசம் சாலையின் தென் பகுதியில் பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ளது.[1] மேலும் தீக்கிரையான புகழ் பெற்ற மூர் மார்க்கெட், பிராட்வே சாலையில் அமைந்திருந்தது.[2] பைராகி மடம், திருவேங்கடமுடையான் கோயில் அமைந்துள்ளது.[3].

வரலாறு

இந்தச் சாலை உள்ள பகுதி முன்பு ஒரு பள்ளமான நிலப்பகுதியாக இருந்தது. இந்தப் பள்ளத்தின் பெரும்பகுதி பிரிட்டிஷ் அரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்டீபன் பாபன் என்னும் ஆங்கிலேயருக்குச் சொந்தமாக இருந்துள்ளது.

இன்று இந்தச் சாலையில் பொது மருத்துவமனையும் பார்க் டவுன் தபால் நிலையமும் இருக்கும் இடம் அன்று ஒரு மலையாக இருந்தது. அந்த மலை அப்போது நரிமேடு என்று தமிழிலும் ஹாக்ஸ் ஹில்ஸ் என்று ஆங்கிலேயர்களாலும் அழைக்கப்பட்டது. உயரமான நரிமேடு மலைப் பகுதியால் ஜார்ஜ் கோட்டைக்கு ஆபத்து நேர வாய்ப்பிருப்பதாகக் கருதிய பிரித்தானிய அரசு, அந்த நரிமேடு மலையை உடைத்துத் தரைமட்டமாக்க முடிவு செய்தது. இதையடுத்து ஸ்டீபன் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி, உடைக்கும் அந்த மலையைக்கொண்டு பள்ளத்தை நிரப்பும்படி செய்தார். மண்ணடி என அழைக்கப்படும் பகுதியிலும் ஸ்டீபனின் நிலத்திலிருந்த பள்ளத்தையும் மூட நரிமேடு மண் பயன்படுத்தப்பட்டது.[4]

அருகே அமைந்த இடங்கள்

மேற்கோள்கள்

  1. http://www.dinakaran.com/Citizen-journalist/cj-did-you-knowdetail.aspx?id=302&mymode=didyou
  2. http://www.maalaimalar.com/2012/02/17142836/chennai-moor-market-fired.html
  3. http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/09/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4/article2445192.ece
  4. முகமது ஹுசைன் (2018 மார்ச் 17). "நரிமேட்டால் உருவான பிராட்வே". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 1 ஏப்ரல் 2018.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.