பத்மபிரியா (நடிகை)
பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார். சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர்.
பத்மபிரியா | |
---|---|
![]() பத்மபிரியா (2008ல்) | |
பிறப்பு | பத்மபிரியா ஜானகிராமன் பெப்ரவரி 28, 1980 தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | பத்மபிரியா, பிரியா |
பணி | திரைப்பட நடிகை, மாடல் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2004 - தற்போது வரை |
பிறப்பு
பத்மபிரியா தில்லியில் வசித்த தமிழ் பெற்றோரின் மகள் ஆவார். இவரின் தந்தை ஜானகிராமன், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் மற்றும் தாய் விஜயா ஆவார். பத்மபிரியா தில்லியில் பிறந்து, பஞ்சாப்பில் வளர்ந்தார்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2004 | சீனு வசந்தி இலட்சுமிi | வசந்தி | தெலுங்கு | |
2004 | அமிர்தம் | சைனபா கோபிநாதன் | மலையாளம் | |
2005 | தவமாய் தவமிருந்து | வசந்தி ராமலிங்கம் | தமிழ் | தென்னந்திய சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது |
2006 | பட்டியல் (திரைப்படம்) | சரோஜா | தமிழ் | |
2006 | யேஸ் யுவர் ஹானர் | மாயா ரவிசங்கர் | மலையாளம் | கேரள மாநில இரண்டாவது நடிகைக்கான விருது |
2007 | அஞ்சில் ஒரல் அர்ஜூனன் | பவித்ரா | மலையாளம் | |
2007 | சத்தம் போடாதே | பானுமதி | தமிழ் | |
2007 | பரதேசி | உசா | மலையாளம் | |
2007 | நாளு பெண்ணுங்கள்l | குன்னிபெண்ணு | மலையாளம் | |
2007 | டைம் (2007 திரைப்படம்) | சுசன் மேரி தாமஸ் | மலையாளம் | |
2007 | மிருகம் (திரைப்படம்) | அழகம்மா அய்யனார் | தமிழ் | சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு விருது பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த நடிகை) |
2008 | லேப்டாப் (2008 திரைப்படம்) | பயல் | மலையாளம் | |
2009 | பொக்கிசம் | நதிரா | தமிழ் | பரிந்துரை —சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரை - விஜய் விருதுகள் (சிறந்த நடிகை) |
2010 | இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்[1] | பப்பாளி | தமிழ் | |
2010 | தமாசு (திரைப்படம்) | டாக்டர். சாந்தி | கன்னடம் | |
2011 | சீனியர்ஸ் | இந்து | மலையாளம் | |
2011 | சீனேகவீடு | சுனந்தா | மலையாளம் | |
2011 | நாய்கா | மலையாளம் | ||
2012 | அப்பரஞ்சித துமி | குஹூ | Bengali | |
2012 | கோப்ரா | மலையாளம் | ||
2012 | பேச்சுலர் பார்டி | மலையாளம் | கப்பா கப்பா திரைப்பாடலுக்கு சிறப்புத் தோற்றம் | |
2012 | நம்பர் 66 மதுர பஸ் | சூரியா பத்மம் | மலையாளம் | |
2012 | இவன் மகாரூபன் | அம்மினி | மலையாளம் | |
2012 | பாப்பின்ஸ் | கந்தா | மலையாளம் | |
2013 | மேட் டேட் | டாக்டர். ரஷ்யா | மலையாளம் | |
2013 | லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் (மலையாளத் திரைப்படம்) | மலையாளம் | ||
2013 | தங்க மீன்கள் | தமிழ் |
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.