பசும்பொன்
பசும்பொன் (ஆங்கிலம்:PASUMPON) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் தவசிக்குறிச்சி வருவாய்க் கிராத்தின் கமுதி வருவாய் வட்டத்தின் 16 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:16) ஆகும்.[4][5] இந்தக் கிராமத்தின் உட்கடையான ஒரு சின்னக் கிராமம்(சிற்றூர்).
'பசும்பொன்' | |
— கிராமம் — | |
அமைவிடம் | 9°24′35″N 78°23′49″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | கே. வீர ராகவ ராவ், இ. ஆ. ப. [3] |
ஊராட்சி மன்றத் தலைவர் | |
மக்கள் தொகை | 2,191 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) இந்த சிற்றூரில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.[6][7]
அமைவிடம்
கமுதியிலிருந்து அபிராமம் செல்லும் வழியில் கமுதியிலிருந்து சுமார் 3 கி.மீ.தூரத்திலும், அபிராமத்திலிருந்து இருந்து 7 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 327 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து கிழக்கே சுமார் 6 கி.மீ தூரத்தில் பறவைகளின் சரணாலயம் காஞ்சிரங்குளம் கண்மாய் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தவசிக்குறிச்சி கிராமத்தில் மொத்த வீடுகள்-454 இதில் 2191 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 970,பெண்கள்794 பாலின விகிதம் 794. எழுத்தறிவு பெற்றவர்கள் 1300 பேர். இதில்882 பேர் ஆண்கள்; 418 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 68.71% ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 299 ஆண் குழந்தைகள் 148,பெண் குழந்தைகள் 151ஆவர்.[8]
முக்கிய பயிர்
இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இது வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு சீமைக் கருவேல மரம் (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது.
அடிக்குறிப்பு
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=27¢code=0004&tlkname=Kamuthi#MAP
- http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=27&blk_name=Kamudi&dcodenew=23&drdblknew=8
- பசும்பொன் தேவர் குரு பூஜை விழா தினமணி 29.10.2013
- பசும்பொன் தேவர் குரு பூஜை: முதல்வர் சார்பில் அமைச்சர்கள் இன்று அஞ்சலி தினமணி 30.10.2013
- "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: அக்டோபர்28.