வறட்சி

வறட்சி அல்லது வரட்சி என்பது ஒரு வர‌ண்ட காலகட்டத்தைக் குறிக்கும். நீண்ட காலத்திற்கு மழைவீழ்ச்சி (பொழிவு) கிடைக்கமையால் ஏற்படுகின்ற சூழல் நிலைமையை வரட்சி என்று எளிமையாக வரைவிலக்கணப்படுத்தலாம். ஆயினும் வரட்சி பற்றிய திட்டமான வரையறை காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு, பிரதேசத்திற்குப் பிரதேசம் வெறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக லிபியா நாட்டில் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 180 மில்லி மீட்டர் வரை குறைவுபடுமாயின் அங்கு வரட்சி நிலையுள்ளதாகக் கொள்ளப்படும். ஐக்கிய அமெரிக்காவில் இரண்டு தினங்களுக்குள் 2.5 மில்லி மீட்டருக்குக் குறையுமாயின் அது அங்கு வரட்சி நிலையைக் குறிக்கும். இலங்கையில் அந்தந்த காலநிலை வயலத்துக்குரிய சராசரி மழைவீழ்ச்சியின் 75 சதவீதத்திற்கும் குறைவாக மழை கிடைக்கும் போது அப்பிரதேசத்தில் வரட்சி நிலவுவதாகக் கூறப்படும். பல காலமாக மழையில்லாத‌ வறண்ட மற்றும் தண்ணீர் பற்றாக்குறையுள்ள நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டது எனப்படும். இங்கு வேளாண்மை மிகவும் குறைந்த அளவிலேயே நடைபெறும். வறட்சி காணப்படும் இடங்களிள் வறுமையும் பெரிய அளவில் காணப்படும்.

வறண்ட நிலம்

வறட்சி நிலைகள்

வறட்சி அதன் பாதிப்பு மற்றும் கால அளவின் அடிப்படையில் நான்கு நிலைகளைக் கொண்டதாக வகுக்கப்படும்.

  1. வானிலைசார் வறட்சி: வளமையான மழைவீழ்ச்சிக் காலத்திலும் குறைவான மழைவீழ்ச்சியின் ஆரம்பநிலை இது. இந்நிலையில் மழை குறைந்த சூழலை உணரக்கூடியதாயிருக்கும்.
  2. விவசாய வறட்சி: மண்ணிலுள்ள நீரின் அளவு குறைந்து பயிர் செய்யமுடியாத நிலை தோன்றுவது இதுவாகும்.
  3. நீரியல்சார் வறட்சி: வறட்சியான காலநிலை தொடர்ந்திருப்பதனால் நீர்நிலைகளான ஆறுகள், குளங்கள், ஓடைகள், வாவிகள் முதலானவை வரண்டு போகும் நிலை இது.
  4. சமூகப் பொருளாதார வறட்சி: தொடர்ந்த வறட்சி காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு வறுமை முதலான நிலை தோன்றுதல்.

வெளி இணைப்புகள்

{{குறுங்க ட்டுரை}}

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.