நூல் வடிவமைப்பு
நூல் வடிவமைப்பு என்பது, ஒரு நூலின் உள்ளடக்கம், பாணி, அமைப்பு, வடிவமைப்பு, அதன் பல்வேறு கூறுகளின் ஒழுங்கு ஆகியவற்றை உட்படுத்தி அவையனைத்தும் ஒத்திசைவான முழுமையைத் தரும்வகையில் ஒன்றாக ஆக்கும் வழிமுறை ஆகும்.
இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று: |
|
நூலின் கூறுகள்
முன் அட்டை, பின் அட்டை, முன் அட்டைக்குப் பின்னும், பின் அட்டைக்கு முன்னும் வரும் இரண்டு வெற்றுத் தாள்களையும் தவிர்த்து ஒரு நூலின் எஞ்சிய கூறுகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இவை,
- முன் பகுதி
- உடல் பகுதி
- பின் பகுதி
எனலாம். மேற்படி ஒவ்வொரு பகுதிகளிலும் பல உட் கூறுகள் உள்ளன. எல்லா நூல்களிலும் எல்லாக் கூறுகளும் இல்லாவிட்டாலும், இவற்றில் பெரும்பாலானகூறுகள் ஒரு நூலில் காணப்படலாம். அவ்வாறான கூறுகளின் பட்டியல் பின்வருமாறு:
- முன் பகுதி
- அரைத் தலைப்பு
- முன் படப்பக்கம்
- தலைப்புப் பக்கம்
- பதிப்பு அறிவித்தல்
- உரித்தாக்கம்
- உள்ளடக்கம்
- படிமங்கள் பட்டியல்
- அட்டவணைகள் பட்டியல்
- அணிந்துரை
- முன்னுரை
- நன்றியுரை
- அறிமுகம்
- உடல் பகுதி
- அத்தியாயங்கள்
- பிரிவுகள்
- பின்பகுதி
- பின்னுரை
- முடிவுரை
- பின்னிணைப்புக்கள்
- அருஞ்சொல் விளக்கம்
- நூற்பட்டியல்
- சொற்பட்டியல்
- பிழை திருத்தம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.