நுகர்வோர் உரிமைகள்

நுகர்வோர் பொருட்களையும், சேவைகளையும் நுகரும் போது அவர்களிற்கு உள்ள உரிமைகளே நுகர்வோர் உரிமைகள் (Consumer rights) ஆகும். காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட வகைகளில் நுகர்வோர் உரிமைகள் வகைப்படுத்தி கூறப்பட்டு வருகின்றது. இத்தகைய நுகர்வோர் உரிமைகளை முன் வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அல்லது நிறுவனங்கள் வருமாறு.

  1. அமெரிக்க ஜனாதிபதி ஜோன். எப். கென்னடி(John F. Kennedy)
  2. சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனம்.

கென்னடியின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்

  • பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் உரிமை -

உயிருக்கும், சுகாதாரத்துக்கும் ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை நுகர்வதில் இருந்து பாதுகாப்புப் பெறல்.

  • தெரிவு செய்து கொள்ளும் உரிமை -

விரும்பிய இடத்தில் பல்வேறுபட்ட வகையான பொருட்கள்,சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், போட்டிச் சந்தையில் அரசாங்க விதிகளிற்கு உட்பட்ட, தரமான நம்பிக்கையான பொருட்களையும், சேவைகளையும் சந்தை விலையில் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை.

  • தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை -

விளம்பரங்கள், வெளிப்புற தகவல் சீட்டுக்கள்(lebal) மற்றும் வேறு விளம்பர வழிமுறைகளில் குறிப்பிடப்படும் தகவல்கள், விலை, நிறை போன்றவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், தவறான தகவல்களை அறிந்து சரியான தெரிவுகளை தேர்வு செய்வதற்குமான உரிமை.

  • கவனத்தை ஈர்க்கும் உரிமை -

ஒரு குறிப்பிட்ட அரசாங்கம் பொருட்கள், சேவைகள் தொடர்பாக வெளியிடும், அறிவித்தல்கள், நியாய விலைகள், பொருட்களின் தரம் என்பன தொடர்பாக அவ்வரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்குள் வசிக்கும் நுகர்வோரால் அறிந்து கொள்ளும் உரிமை.

சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனத்தின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்

  • அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை.
  • நட்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
  • சூழல் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
  • சுமூகமான சூழலில் வாழ்வதற்கான உரிமை.

நுகர்வோர் உரிமைகளின் முக்கியத்துவம்

  1. நுகர்வோர் பொருட்கள் சேவைகளை விலையினூடாகவே நுகர்வு செய்கின்றார். இதனால் திருப்தியளித்தல் வேண்டும்.
  2. நுகர்வோர் திட்டமிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவித்தல்.
  3. போட்டியான சூழலில் நுகர்வோர் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.
  4. நுகர்வோரது உடல், உள நலம் பாதிப்படயாதவாறு திருப்தியளிக்கப்படல் வேண்டும்.

இவற்றையும் பாருங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.