தொழில் நிறுவனங்கள்

தொழில் நிறுவனம்(Business Organization) எனப்படுவது இலாபத்தினை உழைப்பதற்காக தனியாளாகவோ அல்லது கூட்டாகவோ வணிகத்தினை நடாத்துவதற்காக உருவாக்கப்படும் சட்டபூர்வமான அமைப்பு ஆகும்.

இத்தகைய நிறுவனங்கள் இலாபநோக்கற்ற நிறுவனங்களிலிருந்து முழுமையாக வேறுபடும். தொழில் நிறுவனத்தின் அமைப்பாக்கத்திற்கு பௌதீகவளம், மனிதவளம், நிதிவளம் மற்றும் தகவல்வளம் என்பன அவசியமாகும். இவ் வளங்களினைக் கொண்டு தொழில் நிறுவனங்களானது உற்பத்தி, கொள்வனவு, விற்பனை, சேவைகள் வழங்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.