இந்தியாவின் நிதியமைச்சர்

இந்தியாவின் நிதி அமைச்சர் (Minister of Finance of India) இந்திய அரசின் நிதி அமைச்சின் தலைவர் ஆவார். அமைச்சரவையின் மூத்த அலுவலகம் ஒன்றின் தலைவரான நிதி அமைச்சர் அரசின் நிதிக்கொள்கைக்குப் பொறுப்பானவர் ஆவார். அத்துடன் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளரும் ஆவார். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, பல்வேறு அமைச்சரவைகளுக்கும், அரசு நிறுவனங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை இவரே தீர்மானிக்கிறார். இவருக்கு உதவியாக நிதி இராசாங்க அமைச்சர், துணை நிதி அமைச்சர் ஆகியோர் செயல்படுகின்றனர்.

நிதி அமைச்சர்
பதவியில்
நிர்மலா சீத்தாராமன்

31 மே 2019  முதல்
நியமிப்பவர்பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர்
முதலாவதாக பதவியேற்றவர்லியாகத் அலி கான்
உருவாக்கம்29 அக்டோபர் 1946

விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது நிதி அமைச்சராக ஆர். கே. சண்முகம் செட்டியார் இருந்துள்ளார். இவரே இந்தியாவின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். தற்பொழுதைய நிதியமைச்சராக நிர்மலா சீத்தாராமன் பதவியில் உள்ளார்.

நிதியமைச்சர் காலவரை கல்வி
லியாகத் அலி கான்1946-1947 (இடைப்பட்ட அரசு)அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
ஆர். கே. சண்முகம் செட்டி1947-1949சென்னைப் பல்கலைக்கழகம்
ஜான் மத்தாய்1949-1951ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
சிந்தமன்ராவ் தேஷ்முக்1951-1957ஜீசஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ்
டி. டி. கிருஷ்ணமாச்சாரி1957-1958சென்னைப் பல்கலைக்கழகம்
ஜவஹர்லால் நேரு1958-1959டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ்; மைய ஆலயம்
மொரார்ஜி தேசாய்1959-1964மும்பை பல்கலைக்கழகம்
டி. டி. கிருஷ்ணமாச்சாரி1964-1965சென்னைப் பல்கலைக்கழகம்
சச்சிந்திர சவுத்ரி1965-1967கொல்கத்தா பல்கலைக்கழகம்
மொரார்ஜி தேசாய்1967-1970மும்பை பல்கலைக்கழகம்
இந்திரா காந்தி1970-1971விஸ்வபாரதி பல்கலைக்கழகம்; ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
ஒய். பி. சவாண்1971-1975பூனா பல்கலைக்கழகம்
சி. சுப்பிரமணியன்1975-1977சென்னைப் பல்கலைக்கழகம்
மொரார்ஜி தேசாய்1977-1979மும்பை பல்கலைக்கழகம்
சரண் சிங்1979-1980மீரட் பல்கலைக்கழகம்
ரா. வெங்கட்ராமன்1980-1982சென்னைப் பல்கலைக்கழகம்
பிரணாப் முக்கர்ஜி1982-1985கொல்கத்தா பல்கலைக்கழகம்
வி. பி. சிங்1985-1987அலகாபாத் பல்கலைக்கழகம்; பூனா பல்கலைக்கழகம்
எசு. பி. சவாண்1987-1989சென்னைப் பல்கலைக்கழகம்; ஒஸ்மானியா பல்கலைக்கழகம்
மது தன்டவதே1989-1990
யஷ்வந்த் சின்கா1990-1991பாட்னா பல்கலைக்கழகம்
மன்மோகன் சிங்1991-1996பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகார்; செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்; நியுபீல்டு கல்லூரி, ஆக்ஸ்போர்டு
ப. சிதம்பரம்1996-1998சென்னைப் பல்கலைக்கழகம்; ஆர்வர்டு வணிகவியல் பள்ளி
யஷ்வந்த் சின்கா1998-2002பாட்னா பல்கலைக்கழகம்
ஜஸ்வந்த் சிங்2002-2004இந்திய தேசிய பாதுகாப்புப் பயிற்சிப் பள்ளி
ப. சிதம்பரம்மே 2004 - நவம்பர் 2008சென்னைப் பல்கலைக்கழகம்; ஆர்வர்டு வணிகவியல் பள்ளி
மன்மோகன் சிங்டிசம்பர் 2008 - ஜனவரி 2009 (பிரதமர் பொறுப்பிலிருந்து கூடுதலாக இப்பொறுப்பையும் கவனித்தார்)பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகார்; செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்; Nuffield College, Oxford
பிரணாப் முக்கர்ஜி24 சனவரி, 2009 - 26 ஜூன், 2012 (இடையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பிலிருந்து கொண்டு கூடுதலாக இப்பொறுப்பினை மேற்கொண்டார்)கொல்கத்தா பல்கலைக்கழகம்
மன்மோகன் சிங்ஜூன் 26, 2012 - ஜுலை 31, 2012 முதல் (பிரணாப் முக்கர்ஜியின் விலகலால் பிரதமர் இப்பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார்)பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகார்; செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்; நியூஃபீல்டு கல்லூரி, ஆக்சுபோர்டு
ப. சிதம்பரம்ஜூலை 31, 2012 - 26 மே 2014சென்னைப் பல்கலைக்கழகம்; ஆர்வர்டு வணிகவியல் பள்ளி
அருண் ஜெட்லி30 மே 2019 வரைதில்லி பல்கலைக்கழகம்
நிா்மலா சீத்தாராமன் 30 மே 2019 முத்ல் நிதியமைச்சராக உள்ளாா் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நிதியமைச்சர்கள்

  • ஆர்.கே. சண்முகம் செட்டியார்.--பிறப்பு1892- இறப்பு 1953. விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர்.
  • டி.டி. கிருஷ்ணமாச்சாரி.
  • சி. சுப்பிரமணியம். இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்.1998- ல் பாரத இரத்தினா பெற்றார்.
  • ஆர். வெங்கட்ராமன்.இந்திய குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
  • ப. சிதம்பரம். (பிறப்பு 16-9-1945 ----) சிவகங்கை மாவட்டம் காநாடுகாத்தான் ஊரில் பிறந்தார்.சட்டம் பயின்றவர்.இந்திய தேசிய காங்கிரசின் எம்.பி
  • நிர்மலா சீத்தாராமன். தற்போதைய நிதியமைச்சர். இந்திரா காந்திக்குப் பிறகு இவர் இரண்டாவது பெண் நிதித்துறை அமைச்சர் ஆவார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் மதுரையில் 1959ஆம் ஆண்டு பிறந்தார். பாஜக மாநிலங்களவை உறுப்பினர்

சான்றுகள்

    இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.