நைடாசிரி மாகாணம்

நைடாசிரி, பிஜி நாட்டின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இது பிஜியின் பெரிய தீவான விட்டி லிவு தீவில் அமைந்துள்ளது. இது 1666 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கட்தொகை 160759 ஆகும். பிஜியின் அதிக மக்கட்தொகை கொண்ட இரண்டாவது மாகாணம் இதுவே. இங்கு பிரித்தானியக் காலனித்துவ ஆதிக்கக் காலத்தில் இருந்தே சர்க்கரை ஆலைகள் இயங்குகின்றன.

மக்கள்

இங்கு 160,760 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 80,564 பேர் ஆண்கள், 80,196 பெண்கள் ஆவர். 93, 124 பிஜியர்களும், 58, 496 பிஜி இந்தியர்களும், 9,140 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

சான்றுகள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.