பிஜி இந்தியர்

பிஜி இந்தியர் (Indo-Fijians) எனப்படுவோர் இந்தியா மற்றும் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா போன்ற பல்வேறு பாகங்களிலும் இருந்து பிஜித் தீவில் குடியேறியவர்களின் வம்சாவழியினரைக் குறிக்கும்.[7] 2007 கணக்கெடுப்பின் படி பிஜியில் இவர்களின் மொத்தத்தொகை 313,798 (37.6%) ஆகும்.[8] இவர்களின் மூதாதையர்கள் பெரும்பாலும் 1879 முதல் 1916 வரையான காலப்பகுதியில் பிஜியின் பிரித்தானிய ஆட்சியாளர்களால் இங்குள்ள சீனித் தோட்டங்களில் பணி புரிவதற்காக அழைத்து வரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். இவர்களுடன் பின்னர் இங்கு வந்து குடியேறிய குஜராத்தியர், மற்றும் பஞ்சாபியரும் இணைந்தனர். இவர்கள் காலப்போக்கில் தமது தனிப்பட்ட பண்பாட்டைப் பேணிப் பாதுகாத்தாலும், பிஜிய இனத்தவர்களின் மொழி, உடை, மற்றும் அவர்களது பழக்க வழக்கங்களைத் தழுவினர். பிஜி இந்தியர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடியிருந்தாலும், அதில் அவர்கள் பெரிதளவு வெற்றி காணவில்லை. பெருமளவு இந்தியர்கள் தமது சமூக உரிமை, மற்றும் மேம்பட்ட வாழ்வைத் தேடி அங்கிருந்து வெளியேறினர். 1980களின் இறுதியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சிகளின் தாக்கத்தால் இந்த வெளியேறல் பெரும் எண்ணிக்கையில் இடம்பெற்றது.

பிஜி இந்தியர்கள்
Fiji Indians
அயாசு சாயெத்-கையூம்
மொத்த மக்கள்தொகை
460,000
பிஜியின் மொத்த மக்கள்தொகையில் 40% (2001)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 பிஜி313,798 (2007 கணக்கெடுப்பு)[1]
 ஆத்திரேலியா48,141 (2006)[2]
 நியூசிலாந்து37,746 (2006)[3]
 ஐக்கிய அமெரிக்கா30,890 (2000)[4]
 கனடா24,441 (2004)[5]
 ஐக்கிய இராச்சியம்தெரியவில்லை
மொழி(கள்)
பிஜி இந்தி (lingua franca),
பஞ்சாபி மொழி, குஜராத்தி
சமயங்கள்
இந்து  (76.7%),  இசுலாம்  (15.9%), சீக்கியர்  (0.9%),  கிறித்தவர்  (6.1%),  ஏனையோர்  (0.4%) [6]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.