தோல் (புதினம்)

தோல் திண்டுக்கல் பகுதிகளில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவலநிலையை மையமாகக் கொண்டு முற்போக்கு எழுத்தாளர் தானியல் செல்வராசு எழுதியுள்ள தமிழ் புதினமாகும். தோல் பதனிடும் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள், இதனால் தொழிலாளர் குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும் மற்றும் தங்கள் போராட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்று உரிமைகளை மீட்டதையும் இப்புதினம் விவரிக்கிறது. இவை அப்பகுதிவாழ் மக்களின் வழங்குமொழியிலேயே விவரிக்கப்பட்டுள்ளது. 117 கதைமாந்தரைக் கொண்டு 26 அத்தியாயங்களில் இந்த புதினம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலின் நீளத்தைக் கண்டு பலரும் பதிப்பிக்காதநிலையில் 2010ஆம் ஆண்டிலேயே இது நண்பரொருவரின் உதவியால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.[1] இந்த புதினத்திற்கு தமிழக அரசு சார்பில் 2011ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதும் 2012ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்துள்ளன.

தோல்
நூல் பெயர்:தோல்
ஆசிரியர்(கள்):டேனியல் செல்வராஜ்
வகை:புதினம்
துறை:தமிழிலக்கியம்
காலம்:21ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகள்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பதிப்பு:முதல் பதிப்பு: 2010
பிற குறிப்புகள்:2012 ஆம் ஆண்டில் தமிழ்மொழிக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்

சான்றுகோள்கள்

  1. "திண்டுக்கல் நாவலாசிரியர் செல்வராஜ் எழுதிய நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது". பார்த்த நாள் டிசம்பர் 22, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.