ஆலாபனை (நூல்)
ஆலாபனை என்னும் நூல் கவிஞர் அப்துல் ரகுமானால் பாக்யா இதழில் எழுதப்பட்ட 42 வசன கவிதைகளின் தொகுப்பு ஆகும். 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூலிற்கு 1999 ஆம் ஆண்டில் தமிழ்மொழிக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இந்நூலை அப்துல் ரகுமான் தன் தமிழ்ப் பேராசிரியரான ஒளவை சு. துரைசாமியின் நினைவாக வெளியிட்டு இருக்கிறார். ஒவ்வொரு கவிதைக்கும் ஓவியர் மணியம் செல்வன் ஓவியங்கள் வரைந்திருக்கிறார். இந்நூலில் உள்ள கவிதைகளின் அறிமுகம் வருமாறு:
ஆலாபனை | |
---|---|
நூல் பெயர்: | ஆலாபனை |
ஆசிரியர்(கள்): | அப்துல் ரகுமான் |
வகை: | வசன கவிதைத் தொகுப்பு |
துறை: | தமிழிலக்கியம் |
காலம்: | 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகள் |
இடம்: | சென்னை |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 160 |
பதிப்பகர்: | கவிக்கோ பதிப்பகம் 20 முதல் கடல்வழிச் சாலை வால்மீகி நகர் சென்னை |
பதிப்பு: | முதல் பதிப்பு: பிப்ரவரி,1995 இரண்டாம் பதிப்பு: மூன்றாம் பதிப்பு: அக்டோபர், 2000 |
ஆக்க அனுமதி: | வகிதா |
பிற குறிப்புகள்: | 1999 ஆம் ஆண்டில் தமிழ்மொழிக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் |
ஒப்புதல் வாக்குமூலம்
விளக்குகள்
விளக்குகளின் சுடர்களைப் பற்றிய கவிதையீஇ
கனவு
கனவுகளால் வாழ்கிறவர்களை வாழ்த்துவோம்! கனவுகளில் வாழ்கிறவர்களுக்காக அனுதாபப்படுவோம் எனக் கூறும் கவிதை.
போட்டி
வானத்திற்கும் மனிதனுக்கும் நடக்கும் போட்டியைப் பற்றிய கவிதை
பெளர்ணமிப் பிறை
குழந்தைமையைப் பற்றிய கவிதை.
அலங்காரம்
கண்ணுக்கு அழகாக இருப்பவர்களைக் காலம் சிதைத்துவிடுகிறது; காதுக்கு அழகாக இருப்பவர்கள் மரணத்தையும் அலங்காரமாக்கிக் கொள்கிறார்கள் எனக்கூறும் கவிதை
தவறான எண்
தொலைபேசியில் தவறான எண்ணில் தன்னிடம் மாட்டிக்கொண்ட கடவுளை வினாக்களால் துளைக்கும் கவிதை.
பற்று வரவு
மனிதர்கள் மது வாழ்வின் தடயங்களை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்னும் கவிதை
நான் யார்
நான் தனியாளா என்னும் அகத்தாய்வு செய்யும் கவிதை
இழந்தவர்கள்
வயிற்றில் விழுந்து கிடப்பவனே! மேலே இதயத்திற்கு ஏறு! அங்கே உனக்கான ராஜாங்கம் காத்திருக்கிறது எனக் கூறும் கவிதை.
இரவின் கண்ணீர்
இருண்மையைப் பற்றிய கவிதை
ஆறாத அறிவு
உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் ஆறாவது அறிவைப் பெற்றிருக்கிறான். அதற்காக அவன் பெருமைப்படுகிறான் எனக் கூறும் கவிதை.
மானுடத்தின் திருவிழா
எங்கே அழகும் சுதந்திரமும் உண்டோ அங்கேதான் மானுடம் திருவிழாக் கொண்டாடுகிறது எனக் கூறும் கவிதை
கோடுகள்
வரப்பிலும் முளைக்கிறது புல்; வேலியிலும் மலர்கிறது பூ; நம் கோடுகளில் மட்டும் காயங்கள் எனக் கூறும் கவிதை.
வெற்றி
தோல்வியே! நீதான் நாம் சம்பாதிக்கும் பணம் வெற்றியைக் கூட அதனால் வாங்க முடியும் எனக் கூறும் கவிதை.
சிறகுகள்
பறவையைப் போல தனக்குச் சிறகுகள் இல்லையே என ஏங்கும் மனிதனைப் பார்த்து, “பற! மேலே பற! உன்னைவிட மேலே பற!” எனக் கூறும் கவிதை.
ஒரு மேகத்தைப் போல்
மேகத்திற்கும் மனிதனுக்கும் நடக்கும் தத்துவ உரையாடல்
காந்தக் கயிறு
சகலமும் அதனால் வந்தவை; சகலமும் அதற்காக வந்தவை. அந்தத் தூண்டிலில்தான் இறைவனும் சிக்கிக்கொள்கிறான் எனக் காதலின் சக்தியைப் பற்றிப் பேசும் கவிதை.
அதுதான்
வாழ்க்கையைப் பற்றிய கவிதை
அந்த இடம்
ஒலியும் ஒளியும் மணமும் சங்கமித்துப் பேதமற்றிருக்கும் அந்த இடத்திற்கு என்னையும் அழைத்துச் செல் என வேண்டும் கவிதை.
மாதிரி
ஒருவர் யார் யார் மாதிரியாகவோ இருந்து தன்னுடைய அடையாளத்தை இழப்பதைப் பற்றிய கதை.
முரண்களின் போராட்டம்
ஒருவருக்குள் இருக்கும் இரண்டு முரண்பாடுகளின் போராட்டத்தைப் பற்றிய கவிதை.
பழம் புதிது
புதுமை நாட்டமே உன்னை வளர்ந்தது உன் காயங்களுக்கும் அதுதான் காரணம் எனக் கூறும் கதை.
குருடர்களின் யானை
குருடர்கள் சிலர் யானைத் தடவிப் பார்த்து அதனைப் பற்றிப் புரிந்துகொண்டதைப் போல மதத்தை மூடர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்னும் கவிதை.
வகைகள்
ஒன்றே பல ஆனதும் பல மீண்டும் ஒன்றில் ஒடுங்குவதும் அறி! எனக் கூறுக் கவிதை.
பாதை
பல்வேறு பாதைகள் இருக்கும் உலகில் இதயத்திற்குப் போகும் பாதையை மட்டும் காணவில்லை; அதனால்தான் மனிதன் இன்னும் ஊர்ப்போய்ச் சேரவில்லை எனக் கூறும் கவிதை.
வேர்களும் கிளைகளும்
நீ சிறிய விதைதான்; ஆனால் உனக்குள் ஒளிந்திருக்கிறது பிரம்மாண்டமான மரம் எனக் கூறும் கவிதை.
மனித புத்தி
பறவைகளின் சுதந்திரத்தை விலங்குகளின் கள்ளங் கபடற்ற தன்மையை மனிதன் கற்றுக்கொண்டிருக்கலாம் எனக் கூறும் கவிதை.
கொடுக்கல்
கொடு நீ சுத்தமாவாய்; கொடு நீ சுகப்படுவாய்; கொடு அது உன் இருத்தலை நியாயப்படுத்தும் எனக் கூறும் கவிதை.
கடற்கரை
வாழ்க்கை ஒரு மகா சமுத்திரம் எனக் கூறும் கவிதை.
மரணம் என்ற அழகு
மரணம் என்றால் அழிவு என்கிறாய்; அது நிறைவு என்பதை நீ கவனித்ததில்லையா? என வினவும் கவிதை.
முகமூடி
நம் முகமூடிகளே நம் மகுடங்கள்; அவை கழற்றப்பட்டுவிட்டால் யாரும் அவரவர் அரியாசனத்தில் அமர்ந்திருக்க முடியாது.
சாத்தானின் சந்நிதி
வாழ்க்கையை வழங்கும் காதலையும் காமத்தையும் மறுத்து மரணத்தை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள் என வினவும் கவிதை.
கண்ணீரின் ரகசியம்
கண்ணீர்தான் உன்னைக் காட்டுகிறது; புன்னகையோ சில நேரங்களில் உனக்குத் திரையாகிவிடுகிறது என விளக்கும் கவிதை.
தற்கொலை செய்
அகங்காரம் என்ற கிரீடத்தைச் சூட்டிக்கொள்கிறவனே! ‘தற்’கொலை செய்துகொள்; நீ அமரனாவாய்! எனக் கூறும் கவிதை
சுயப்பிரசவம்
உன்னைப் பிரசவிப்பது உன் பெற்றோர்கள் அல்லர்; உன்னை நீயேதான் பிரசவிக்க வேண்டும் எனக் கூறும் கவிதை
பத்திரப்படுத்துங்கள்
நாளை ஒரு பூகம்பத்தில் நீங்கள் முழுவதும் அழிந்துபோகாமல் இருப்பதற்கு எவற்றை எல்லாம் பத்திரப்படுத்த வேண்டும் எனக் கூறும் கவிதை.
மறுபக்கம்
ஒரு பக்கத்தையே பார்த்துக்கொண்டிருப்பவனே திருப்பிப் பார்; மறுபக்கத்திலும் இருக்கிறது சத்தியத்தின் தரிசனம் எனக் கூறும் கவிதை.
நீராக …
நீரைப்போல் எங்கே சுற்றி அலைந்தாலும் உன் மூல சமுத்திரத்தை அடைவதையே குறிக்கோளாய்க் கொள்வாயாக எனக் கூறும் கவிதை.
நாட்டுமிராண்டிகள்
காட்டுமிராண்டிகள் எனக் கூறப்படும் மனிதர்களிடம் இருக்கிற, ஆனால் நாகரிகம் அடைந்தவர்களாகக் கருதப்படுகிறவர்களிடம் இல்லாத நாகரிகங்களைப் பேசுகிற கவிதை.
அதிகாரம்
உங்களால் பூவாக முடிந்தால். வண்டுகளை வரவழைக்க நீங்கள் கட்டளை இட வேண்டியதில்லை என விளக்கும் கவிதை.
வீழ்ச்சி
பிறந்ததில் இருந்து எல்லாவற்றிலும் விழுந்து விழுந்து மரத்துப் போய்விட்டது நமக்கு எனக் குத்திக்காட்டும் கவிதை.