தெற்கு மலபார் கிராமீண் வங்கி

தெற்கு மலபார் கிராம வங்கி அல்லது தெற்கு மலபார் கிராமீண் வங்கி, கேரளத்தில் இயங்கிவந்த வங்கிகளுள் ஒன்று. இதன் தலைமையகம், மலப்புறத்தில் உள்ளது. கேரளத்தின் எட்டு மாவட்டங்களில் இயங்கியது. மொத்தம் 506 கிளைகளைக் கொண்டு, உழவுத் தொழில், பிற துறைகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கி உதவியது. பின்னர், வடக்கு மலபார் கிராம வங்கியுடன் இணைக்கப்பட்டு, கேரள கிராம வங்கி என பெயர் மாற்றம் பெற்றது. அதிகாரப்பூர்வமாக, 2013 ஆம் ஆண்டில் இவ்வங்கிகள் இணைக்கப்பட்டன.

தெற்கு மலபார் கிராம வங்கி
South Malabar Gramin Bank
வகைபொதுத்துறை வங்கி
(கனரா வங்கி உதவியுடன்)
நிறுவுகை1976ஆம் ஆண்டு மண்டல ஊரக வங்கிச் சட்டத்தின்கீழ்.
தலைமையகம்மலப்புறம், கேரளா, இந்தியா
தொழில்துறைநிதிச் சேவைகள்
வணிக வங்கி
இணையத்தளம்www.smgbank.com

சான்றுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.