இந்தியத் தனியார்த் துறை வங்கிகள்
இந்தியத் தனியார்த் துறை வங்கிகள் இந்தியாவிலுள்ள வங்கிகளில் தங்கள் முதலீடு அல்லது பங்குகளின் பெரும்பகுதியை தனிநபர் முதலீட்டாளர்கள் வசம் கொண்டுள்ள வங்கிகள் ஆகும். இந்த முதலீட்டில் அரசின் பங்கு இல்லாமலோ குறைவாகவோ இருக்கும்.
1969இல் அனைத்து முதன்மை வங்கிகளும் நாட்டுடமையாக்கப்பட்டன. எனவே இந்தியாவிலுள்ள வங்கிகளில் பெரும்பான்மையானவை பொதுத்துறை வங்கிகளாகும். 1990களில் தாராளமயமாக்கல் கொள்கைகளின் கீழ் மீண்டும் வங்கித்துறை தனியார்த்துறைக்குத் திறக்கப்பட்டது. இதனையடுத்து பல புதிய தனியார் வங்கிகள் துவங்கப்பட்டன. கடந்த இருபதாண்டுகளில் இவை அதிநவீன தொழினுட்பத்தை பயன்படுத்தி பல புதுமைகளையும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி பலமடங்கு வளர்ந்துள்ளன.[1]
தனியார்த்துறை வங்கிகளை பழையவை, புதியவை என இரு வகைப்பாடுகளில் நடுவண் வங்கி பிரித்துள்ளது. 1969இல் நாட்டுடமைக்கு முன்பாக இருந்து சிறியதாகவோ சிறப்புவசதி தந்ததாலோ நாட்டுடைமையாக்கப்படாதவை பழைய தனியார்த்துறை வங்கிகள் எனப்படுகின்றன. புதிய தனியார்த்துறை வங்கிகள் 1990களில் தாராளமயமாக்கலுக்குப் பின் உரிமம் பெற்றவை ஆகும்.
மேற்சான்றுகள்
- "Introduction to private sector banks". பார்த்த நாள் 10-09-2011.