தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம்

தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம் ( ATM usage fees) தங்கள் தன்னியக்க இயந்திரங்களை பயன்படுத்துவதற்காக பல வங்கிகளும் வங்கிகளுக்கிடை பிணையங்களும் வசூலிக்கும் கட்டணமாகும். சில செயற்பாடுகளில், வங்கி உறுப்பினரல்லாதோரிடமிருந்து மட்டுமே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; அல்லாது அனைத்துப் பயனர்களிடத்தும் கட்டணம் வசூலிப்பதும் உண்டு. மனிதர்களால் பணம் வழங்குவதை விட இயந்திரங்கள் மூலமாக வழங்குவது வங்கிகளுக்கு குறைந்த செலவாகும் என்பதால் பலரும் இத்தகைய கட்டணங்களை எதிர்க்கிறார்கள்.

தாய்லாந்து வானூர்தி நிலையமொன்றில் பல்வேறு சேவையாளர்களின் தன்னியக்க வங்கி இயந்திரங்கள்

இரண்டு வகையான கட்டணங்கள் இதில் அடங்கும்: உபரிக் கட்டணம் மற்றும் அன்னியக் கட்டணம். உபரிக் கட்டணம் தன்னியக்க இயந்திரத்தின் உரிமையாளர் ( நிறுவியவர் அல்லது தனிப்பட்ட விற்பனை அமைப்பு) நிர்ணயிப்பதாகும்; இது அந்த இயந்திரத்தை பயன்படுத்துவதற்காக வசூலிக்கப்படுகிறது. அன்னியக் கட்டணம் அல்லது செயற்பாட்டுக் கட்டணம் அட்டையை வழங்கியவரால் வசூலிக்கப்படுவது; இது தங்கள் பிணையத்தில் இல்லாத இயந்திரத்தை பயன்படுத்துவதற்காக வசூலிக்கப்படுகிறது. [[|240px|தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம்||right]]

ஆத்திரேலியா

ஆத்திரேலியாவின் தன்னியக்க வங்கி இயந்திரப் பிணையங்களில் நேரடி கட்டணம் (உபரிக் கட்டணம்) மார்ச்சு 3, 2009 முதல் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டணம் மூலம் போட்டியால் எழும் நன்மைகள் விளையும் என்றும் ஆத்திரேலிய தன்னியக்க வங்கி இயந்திரப் பிணையங்களின் திறன் கூடும் என்றும் ஆத்திரேலிய ரிசர்வ் வங்கி கருதுகிறது.[1]

பிரேசில்

கனடா

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமனான கட்டணம் வசூலிக்க வேண்டும் வங்கிகளைக் கட்டாயப்படுத்தும் நெறிமுறைகளை அறிமுகப்படுத்த சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இதனால் தேசியக் கட்டணங்கள் உயரக் கூடும்.

சூலை 1, 2002இலிருந்து இந்த விதிகள் செயல்படுத்தப்படுகின்றன.[2] ஐரோ வலய, சுவீடன்[3] வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதியில் மட்டுமே குறைந்த கட்டணம் பெறுகின்றனர்; ஐரோவலயத்திற்கு வெளியே குறைந்த பன்னாட்டு கட்டணம் பெறுவதில்லை. தேசிய ஐரோ பணமெடுத்தலுக்கும் பன்னாட்டு ஐரொ பணமெடுத்தலுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டினால் ஐரோ-வலயத்தில் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு (சுவீடிய மக்களைத் தவிர) குறைந்த பன்னாட்டு கட்டணம் பெற எவ்விதத் தடையும் இல்லை.

ஆஸ்திரியா

பின்லாந்து

செருமனி

அயர்லாந்து

நெதர்லாந்து

நோர்வே

போலந்து

போர்த்துகல்

எசுப்பானியா

சுவீடன்

ஐக்கிய இராச்சியம்

மத்திய கிழக்கு

ஈரான்

தென்கிழக்கு ஆசியா

ஆங்காங்

இந்தோனேசியா

தாய்லாந்து

பிலிப்பைன்சு

தெற்கு ஆசியா

பாக்கித்தான்

இலங்கை

வங்காளதேசம்

இந்தியா

சுவிட்சர்லாந்து

ஐக்கிய அமெரிக்கா

மேற்சான்றுகள்

  1. RBA: ATM FEE REFORMS
  2. "EUR-Lex – 32001R2560 – EN". Eur-lex.europa.eu. பார்த்த நாள் 2010-08-11.
  3. "EUR-Lex – 52002XC0711(03) – EN". Eur-lex.europa.eu. பார்த்த நாள் 2010-08-11.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.