வணிக வங்கி
வணிக வங்கி (Commercial bank) என்பது வாடிக்கையாளர் ஒருவருக்கு காசோலை வரைவதன் மூலம் தனது வைப்புக்களை மீளப் பெறும் உரிமையினை வழங்கும் நிறுவனம் ஆகும்.இதுவும் ஒருவகை வங்கியியல் முறைமையாகும்.இவற்றின் நடவடிக்கைகள் நாடுகளின் சட்டத்தினாலும் மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப்படும்.
வங்கி வகைகள் மத்திய வங்கி Advising bank · வணிக வங்கி Community development bank Credit union · Custodian bank Depository bank · Export credit agency முதலீட்டு வங்கியியல் · Industrial bank Merchant bank · Mutual bank Mutual savings bank · National bank Offshore bank · Postal savings system தனியார் வங்கி · Retail Bank Savings and loan association சேமிப்பு வங்கி · Universal bank மேலும்... |
வங்கி கணக்கு Deposit account · சேமிப்புக் கணக்கு பரிமாற்றக் கணக்கு Money market account · வங்கி நிலை வைப்புக் கணக்கு |
வங்கி அட்டைகள் |
|
வங்கி terms கடன் · Money creation தன்னியக்க வங்கி இயந்திரம் Bank regulation · அநாமத்து வங்கி இஸ்லாமிய வங்கி · தனியார் வங்கி அறவழி வங்கி |
நிதிச் சந்தை Financial market participants Corporate finance · தனிமனித நிதி Public finance · நிதி ஒழுங்கு |
வணிக வங்கியால் சகலவிதமான வைப்புக்களையும் பேணமுடியும்,இவற்றில் முக்கியமானது நடைமுறை கணக்குகளை பேணல் மற்றும் கடனாக்கம் செய்தல் (accepting deposits and making loans, as well as other fee based services) என்பனவாகும்.
வணிக வங்கிகளின் சேவைகள்
இவற்றின் பிரதான தொழிற்பாடு
- பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைப்(Deposit) பெறல் அவர்கள் கேட்கும் பொழுது அவற்றினைமீளளித்தல்
- மேலதிக பற்றுகள்(Over Draft),கடன் வழங்கள்.( loans)
- பிணைகள்,முறிகள் (Bonds) போன்றவற்றில் முதலீடல்.
- காசோலை(Cheque) வழங்கல்.
ஏனைய தொழிற்பாடுகளாக
- நிலையான வைப்புகளை பேணல்.
- வெளிநாட்டு நாணய கணக்குகளைப் பேணல்.
- வங்கி பாதுகாப்பு பெட்டக வசதிகளை ஏற்படுத்தல்.
- நகை அடகுபிடித்தல்.
- நாணயமாற்றம் செய்தல்.
- சர்வதேச கொடுக்கல் வாங்கல்களப் பேணல்.
- ATM அட்டை,கடனட்டை(Credit card) வழங்கல்
போன்றனவாகும்.
வணிக வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்
- நடைமுறைக்கணக்கு (Current Deposits)
- சேமிப்பு கணக்கு (Savings Deposits)
- நிலையான வைப்பு(Fixed Deposits)
- அழைப்பு வைப்பு (Call Deposits)
இலங்கையின் சில வணிக வங்கிகள்
- இலங்கை வங்கி
- மக்கள் வங்கி
- கொமர்ஷியல் வங்கி
- ஹட்டன் நசனல் வங்கி
- சம்பத் வங்கி
- செலான் வங்கி
- பான் ஏசியா வங்கி
- யூனியன் வங்கி
- நேசன் டிரஸ்ட் வங்கி
இவற்றையும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.