கடன் அட்டை

கடன் அட்டை ( ஒலிப்பு) என்பது பொருளை வாங்கிய பின் பணம் செலுத்தும் முறை. பொதுவாக கடன் அட்டை வங்கிகளால் விநியோகிக்கப்படுகிறது.ஒருவரின் பொருளாதார நிலையைப் பொறுத்து அவருக்கு வங்கிகள் கடன் அட்டையை வழங்குகின்றன. கடன் அட்டையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பொருளை வாங்கி பிறகு வங்கியில் பணமாக செலுத்தவோ அல்லது கடனாக மாற்றவோ முடியும். கடன் அட்டையில் நிதி விபரமும் இதர தகவல்களும் சேமிக்கப்படும். ஒவ்வொருமுறை பயன்படுத்தப்படும் பொழுது இத்தகவல்களை கணக்குக்கு ஏற்ப இன்றைப்படுத்தப்படும்.

கடன் அட்டைகளுக்கான கட்டணம்

கடன் அட்டைகள் வழங்கிச் செயல்படுதலில் பல கட்டணங்களை வங்கிகள் வசூலிக்கின்றன. உறுப்பினர் கட்டணம், நுழைவுக் கட்டணம், புதுப்பித்தல்/ஆண்டுக் கட்டணம், சேவைக் கட்டணம், சுழலும் கடன் வசதிக்கானக் கட்டணம், கட்டவேண்டிய பணத்தைக் காலதாமதமாகக் கட்டும் போது விதிக்கப்படும். அபராதக் கட்டணம் என்று பல வகை உண்டு. அட்டைகள் வழங்கும் வங்கிக்கும், அட்டை வைத்திருப்போருக்கும் அபராதக் கட்டணம் வசூலிப்பதில் தான் பெரும்பாலும் தகராறுகள் எழுகின்றன. இதுவரை தெரியப்படுத்தாமலோ சொல்லாமலோ இருந்தால் வங்கிகள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடும் நிலையிலேயே பல்வேறு கட்டணங்களையும் விண்ணப்பதாரருக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்டும். உறுப்பினர் சந்தா, புதுப்பித்தலுக்கான் கட்டணங்களுடன், தாமதமாக அல்லது செலுத்தாமல் இருக்கும் தொகைக்கான அபராதக் கட்டணத்தையும் அட்டை வைத்திருப்போருக்கு அறிவுறுத்த வேண்டும். பொதுவாக இப்படி வழங்கப்படும் கடனுக்கு அதிக வட்டி அறவிடப்படும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.