தமிழ்நாட்டு தொழிற்துறைகள்

தொழிலே ஒரு நாட்டின் உயிர்த்துடிப்பு. தொழிலில் சிறந்து விளங்கும் நாடு, பொருளாதாரத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கும். தாம் வாழ்ந்த திணைகளுக்கு பொருந்தியது போல் தமிழர்கள் பேண்தகு தொழில் செய்து சிறப்புற்றிருக்கிறார்கள். தற்காலம் உந்திய அறிவியல் தொழில்நுட்ப புரட்சிகர மாற்றங்களுடன் இயைந்து வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொழில்கள் தொடர்பான கட்டமைப்புளையும் செயற்பாடுகளையும் தமிழ்நாட்டு தொழிற்துறைகள் என்ற தலைப்பு குறிக்கின்றது. தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், வணிக நிறுவனங்கள், அரச அலகுகள், இயற்கை வளங்கள், தொழில்நுட்பம், சட்ட-வணிக சூழல் ஆகியவை தமிழ்நாட்டு தொழிற்துறையின் கூறுகள் ஆகும்.

தமிழ்நாட்டின் பல்வேறு தரவுகள் தொழிற்துறையின் வளர்ச்சியை சுட்டி நிற்கின்றன.

மொத்த தேசிய உற்பத்தி - 64 billion USD - இந்தியாவில் ஐந்தாவது நிலை [1].
தொழில்மயமாக்கம் - இந்தியாவில் இரண்டாவது நிலை .[2]
நகரமயமாதல் - 43.86 % - இந்தியாவில் முதலாவது நிலை .[3]
வெளிநாட்டு முதலீடு - 9.12% - இந்தியாவில் மூன்றாவது நிலை .[4]
தனிநபர் வருமானம் -
இறக்குமதி
ஏற்றுமதி

தமிழ்நாட்டு தொழிற்துறைகள் பட்டியல்

தொழிற்துறைகளும் பொருளாதாரப் பங்கும்

தொழிற்துறை பொருளாதாரப் பங்கு
சேவை 45%
உற்பத்தி 34%
வேளாண்மை 21%

தொழிலும் வாழ்வும்

ஒவ்வொரு தொழிலும் சமம்மென்று கூற முடியாது. வெவ்வேறு காலகட்டங்களில் சூழ்நிலைகளில் வெவ்வேறு தொழில்கள் சிறப்புப்பெற்று இருக்கின்றன. சில தொழில்கள் கூடிய வரவாய் ஈட்டக்கூடியவை. திடைப்பத்துறை போன்ற சில தொழிற்துறைகள் பொருளாதரத்தில் சிறு பங்கே வகித்தாலும், சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை. வேளாண்மை, மீன்பிடித்துறை போன்றவை வாழ்வியலோடு ஒன்றிய மரபுத் தொழிதுறைகள் ஆகும்.

பண்டை சாதிய இந்திய அமைப்பு போன்றல்லாமல், இன்றைய சூழல் தனிமனிதர் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு தொழிற்துறையிலும் சிறப்பு பெற கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது. புதிய தொழிற்துறைகளில் சிறக்க கல்வியும் ஈடுபாடும் ஆதாரமாகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

மேற்கோள்கள்

  1. "Official site". Government of Tamil nadu. பார்த்த நாள் 2006-08-16.
  2. Ranking of states
  3. World Bank Supports India's Urban Development
  4. Tamil Nadu ranks third in FDI, favoured destination
  5. hyndai chennai
  6. Tamil Nadu most preferred investment destination in India
  7. The Hindu Chennai
  8. Dell India Details
  9. Dell India Details pcworld article
  10. samsang chennai inaguration details

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.