தமிழ்நாடு தானுந்து தொழிற்துறை
தமிழ்நாட்டில் நடைபெறும் தானுந்து வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனை ஆகியவற்றை தமிழ்நாடு தானுந்து தொழிற்துறை எனலாம். இந்தியாவில் தானுந்து தொழிற்துறையில் தமிழ்நாடு முதன்மை பெறுகின்றது. தானுந்து உற்பத்தியில் முன்னிற்கும் பல பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தமது உற்பத்தி நிலையங்களை நடத்திவருகின்றன. இதன் காரணமாகத் தமிழ்நாட்டுக்கு, குறிப்பாக சென்னைக்கு "இந்தியாவின் டெட்ராய்ட்" என்று ஒரு குறிப்பு பெயர் உண்டு [1].
வரலாறு
1948ஆம் ஆண்டு, 'ஆஸ்டின் தானுர்ந்தி' தயாரிப்புகாக் அசோக் லேலண்ட் நிறுவப்பட்டது. இன்று அசோக் லேலண்ட் டிரக்குகள், பஸ் முதலியவற்றை தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்சாலையில் இருந்து தயாரிக்கிறது.[2].போர்ட் நிறுவனம் 1995ஆம் ஆண்டு மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்துடன் 50:50 கூட்டு அடிப்படையில் சென்னையில் நிறுவப்பட்டது. பின்னர் 1998 போர்ட் நிறுவனம், பெரும்பான்மை பங்குகளை வாங்கி போர்ட் இந்தியா நிறுவனம் என்று மாற்றப்பட்டது.கொரியாவை சேர்ந்த ஹுன்டாய் நிறுவனம் 1996ம் ஆண்டு திருப்பெரும்புதூரில் நிறுவப்பட்டது.
தமிழ்நாட்டின் தொழிற்துறை முதலீட்டு அதிகரிக்க, முதலீட்டு நட்பு ஆட்சிகள், நல்ல உள்கட்டமைப்பு, துறைமுகம் ஆகியவற்றை காரணங்களாக கூறலாம். அமெரிக்கவின் கேட்டர்பிள்ளர், ஜப்பானின் கோமாட்சு, தென் கொரியாவின் தூசான் ஆகியவை, பூமியின் நகரும் உபகரணங்கள் தயாரிக்க சென்னையை தேர்ந்தெடுத்துள்ளன. சென்னை-திருப்பெரும்புதூர்-ஓரகடம் ஆட்டோமொபைல் தயாரிக்கும் மையமாக உள்ளது.தேசிய வாகன சோதனை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் 450 கோடி முதலீட்டில் ஓரகடத்தில் அமைய உள்ளது. இதன் மூலம், வாகன உற்பத்தியாளர்கள் வடிவமைப்பு, மாசு, செயல்திறன் தரநிலைகளை சோதனை செய்து கொள்ளாம்.
தானுந்து தொழிற்சாலைகள் (தமிழ்நாடு)
இந்தியாவின் தானுந்து உற்பத்தி மற்றும் உதிரிப்பாகங்கள் துறையின் 30% தமிழ்நாட்டில் உள்ளது[3].ஹுன்டாய்[கொரிய நிறுவனம்] வருடத்தில் 3,30,000 கார்களை(தானுந்து) சென்னையில் உள்ள தொழில்சாலையில் இருந்து தயாரிக்கிறது. ஹுன்டாய் மார்ச் 2012 வரை, 1.5 மில்லியன் கார்களை சென்னையில் உள்ள தொழில்சாலையில் இருந்து 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.டைம்லர் பேருந்து தொழில்சாலை சென்னை ஒரகடத்தில் 425 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ளது[4]. பாரத் லாரிகள் மற்றும் பேருந்துகள், பியூசோ லாரிகள் , மெர்சிடஸ் பென்ஸ் பேருந்துகள் என மூன்று பிராண்டுகளை ஒரே கூரையின் கீழ் தயாரிக்கும் டெய்ம்லர் ஆலை உலகில் ஓரகடத்தை தவிர வேறு எங்கும் இல்லை.
நிறுவனம் | இடம் | நிறுவிய வருடம் | தானுர்ந்தி ரகம் |
---|---|---|---|
அசோக் லேலண்ட் | எண்ணூர், ஓசூர் | 1948 | லாரி, பேருந்து |
போர்ட் | மறைமலை நகர், காஞ்சிபுரம் | 1995 | ஐகான், பியஸ்டா, பிகொ |
ஹுன்டாய் | திருபெரும்புதூர், காஞ்சிபுரம் | 1996 | சன்ட்ரொ, ஐ10, ஐ20, வெர்ணா, அக்சென்ட் |
மிட்சுபிசி | திரூவள்ளூர் | 1998 | மிட்சுபிசி லன்சர், பஜீரோ, சிடியா [5] |
நிசான் | ஒரகடம், காஞ்சிபுரம் | 2005 | டியனா |
பியம்டபில்யு | சிங்கப்பெருமாள்கோவில், சென்னை | 2007 | பியம்டபில்யு 3 வரிசை, பியம்டபில்யு 5 வரிசை, மினி கன்ட்ரிமன்[6] |
ரெனால்ட் | ஒரகடம், காஞ்சிபுரம் | 2007 | லொகன், டஸ்டர், பல்ஸ் |
டைம்லர்[7] | சென்னை | வர்த்தக வாகனங்கள் | |
தபே | சென்னை | 1960 | டிராக்டர் |
கொமாட்ஸ்யூ | ஒரகடம் | 2007 | 60 டன் மற்றும் 100 டன் ஆகிய சுரங்க ட்ரக் வண்டிகள் தயாரிப்பாளர்கள் |
கீழே தமிழ்நாட்டில், தயாரிக்கபடும் டயர்/சக்கரம் நிறுவனங்கள், நிறுவிய வருடம், மற்றும் முதலீடு
நிறுவனம் | இடம் | நிறுவிய வருடம் | முதலீடு[கோடிகள் ரூபாய்] |
---|---|---|---|
எம்.ஆர்.எஃப் | அரக்கோணம், திருவெற்றீயூர் | 1946 | |
அப்பல்லோ டயர்ஸ் | ஒரகடம் | 2008 | 2100 |
பிரிஜ் ஸ்டொன் | ஒரகடம் | ||
டண்லப் | அம்பத்தூர் | மூடப்பட்டது. | |
ஜெ.கெ டயர்ஸ் | திருபெரும்புதூர் | 1400 | |
மிஷ்ஷலின் | தீர்வை கண்டிகை | 2012 | 11000 (4000 நிலை 1) |
- ஹூண்டாய் - 1996 - சென்னை [8]
- போர்டு - மறைமலை நகர், சென்னை - நேரடி வேலை: 2000, தயாரிப்பு திறன் ஒரு வருடத்தில் 100,000 தானுர்ந்தி[9]
- பி.எம்.டபிள்யூ- சனவரி 2006 - 1 பில்லியன் ரூபாய் முதலீடு [10]
- நாஜா[மலேசிய தானுந்து] - சனவரி 2007 [11]
- ஆட்டோமொபைல் சோதனை வசதி [12]
- மிட்சுபிசி மோட்டார்ஸ் - திறன் ஒரு வருடத்தில் 12,000 தானுர்ந்தி[13]
- விஸ்டியான்
- மகிந்திரா அண்டு மகிந்திரா
- இந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிட்டெட்
- நிசான்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- Tamil Nadu - The Detroit of India
- Chennai has emerged as India's Detroit
- Daimler to set up bus unit near Chennai
- மிட்சுபிசி
- BMW starts production of 'MINI Countryman' at Chennai plant
- daimler
- Hyundai to build new India plant http://www.hyundai.co.in/
- Virtual Plant Tour - Chennai Plant
- http://www.bmw.in/in/en/index_highend.html
- http://newsbuzz.sulekha.com/blog/post/2007/01/naza-to-set-up-car-plant-near-chennai.htm
- Auto testing facility: parties vie for credit
- http://www.hindmotor.com/THIRUVALLUR.asp