தங்கர் பச்சான்

தங்கர் பச்சான் (Thangar Bachan) தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர், சூழலியல் செயல்பாட்டாளர் ஆவார்.

தங்கர் பச்சான்
பிறப்புதங்கராசு
1961
பத்திரக்கோட்டை,பண்ணுருட்டி வட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிஉழவர், ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், நாவலாசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1990 – தற்போது வரை

வாழ்க்கைக் குறிப்பு

தங்கர் பச்சான் 1961 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ணுருட்டிக்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் 9-வது பிள்ளையாகப் பிறந்தவர். தந்தையார் மரபு வழியான தெருக்கூத்துக் கலைஞராக விளங்கியவர்.[1] திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று, உலகத் திரைப்படக் கலையை அறிந்தவர்.

தங்கர் பச்சானின் நூல்களை ஆராய்ச்சி செய்து 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல்களாக உள்ளன. 

திரைப்பட வரலாறு

இயக்குநராக

ஆண்டுதலைப்புகுறிப்புகள்
2002அழகி
சொல்ல மறந்த கதை
2004தென்றல்
2005சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
2007பள்ளிக்கூடம்வெற்றியாளர், சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
ஒன்பது ரூபாய் நோட்டு
2013 அம்மாவின் கைப்பேசி[2]
2017களவாடிய பொழுதுகள்

ஒளிப்பதிவு இயக்குநராக

நூற்பட்டியல்

நாவல்கள்

  • ஒன்பது ரூபாய் நோட்டு (புதினம்) - 1996.
  • அம்மாவின் கைப்பேசி (புதினம்) - 2009.[3]

சிறுகதைத் தொகுப்புகள்

  • வெள்ளை மாடு - 1993
  • குடி முந்திரி - 2002
  • இசைக்காத இசைத்தட்டு - 2006

கட்டுரை

  • சொல்லத்தோணுது - 2015

விருதுகள்

  • 1993 - சிறந்த சிறுகதை தொகுப்பு - லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது (வெள்ளை மாடு)
  • 1993 - சிறந்த சிறுகதை தொகுப்பு - திருப்பூர் தமிழ் சங்கம் இலக்கிய விருது (வெள்ளை மாடு)
  • 1996 - சிறந்த நாவல் - தமிழ் நாடு அரசு விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)[4]
  • 1996 - சிறந்த நாவல் - அக்னி அஷர விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)
  • 1996 - சிறந்த நாவல் - திருப்பூர் தமிழ் சங்கம் விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)
  • 1997 - சிறந்த ஒளிப்பதிவாளர் தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது (திரைப்படம் - காலமெல்லாம் காதல் வாழ்க)
  • 1998 - "கலைமாமணி" விருது - தமிழ் சினிமாவில் பங்களிப்புக்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது[5]
  • 2002 - சிறந்த இயக்குநர் SICA விருது - (திரைப்படம் - அழகி )
  • 2005 - சிறந்த நடிகர் ஜெயா தொலைக்காட்சி விருது (திரைப்படம் – சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி)
  • 2007 - திரைப்பட இயக்குநர் பங்களிப்பிற்காக தமிழ் நாடு மாநில ராஜா சான்டோ விருது.[6]
  • 2007 - சிறந்த இயக்குநர் சாந்தோம் விருது. (திரைப்படம் - ஒன்பது ரூபாய் நோட்டு)[7]
  • 2007 - சிறந்த தமிழ் இயக்குநர் சத்யன் நினைவுத் திரைப்பட விருது. (திரைப்படம் - பள்ளிக்கூடம்)[8]
  • 2007 - சிறந்த கதை வசனங்களுக்கான SICA விருது. (திரைப்படம் - பள்ளிக்கூடம்)
  • 2007 - சிறந்த இயக்குநர்  விருது (பள்ளிக்கூடம்) – தமிழ்நாடு அரசு
  • 2015 - சிறந்த நூல் - தினத்தந்தி ஆதித்தனார் இலக்கிய விருது (தங்கர் பச்சான் கதைகள்) 

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.