டங்கன் பிளெட்சர்

டங்கன் அன்ட்ரூ க்வைன் பிளெட்சர் (Duncan Andrew Gwynne Fletcher, OBE, பிறப்பு 27 செப்டம்பர் 1948) ஓர் முன்னாள் சிம்பாப்வே துடுப்பாட்டாளர், அவ்வணியின் அணித்தலைவர் மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர். ஏப்ரல் 27, 2011 அன்று இந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்றுனராக இரண்டாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் பயிற்றுனராக பணிபுரிந்தவேளையில் அந்த அணிக்குப் புத்துயிர் பெற்றதில் பெரும் பங்கு வகித்தார். எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டத்திலும் இவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 27, 2011 இல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.[1]

டங்கன் பிளெட்சர்
சிம்பாப்வே
இவரைப் பற்றி
முழுப்பெயர் டங்கன் ஆன்ட்ரூ க்வைன் பிளெட்சர்
பிறப்பு 27 செப்டம்பர் 1948 (1948-09-27)
சாலிஸ்பரி, உரோடீசியா
வகை பயிற்றுனர்
துடுப்பாட்ட நடை இடது-கை
பந்துவீச்சு நடை வலதுகை மித விரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 3) சூன் 9, 1983:  ஆத்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி சூன் 20, 1983:   மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1984 1985 தென்னாபிரிக்க மேற்கு மாகாணம்
1969 1980 உரோடீசியா
அனைத்துலகத் தரவுகள்
ஒ.நாமுதல்ஏ தர
ஆட்டங்கள் 6 111 53
ஓட்டங்கள் 191 4,095 1,119
துடுப்பாட்ட சராசரி 47.75 23.67 28.69
100கள்/50கள் 0/2 0/20 1/7
அதியுயர் புள்ளி 71* 93 108
பந்துவீச்சுகள் 301 12,352 2,422
விக்கெட்டுகள் 7 215 70
பந்துவீச்சு சராசரி 31.57 28.03 23.60
5 விக்/இன்னிங்ஸ் 0 5 0
10 விக்/ஆட்டம் n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 4/42 6/31 4/41
பிடிகள்/ஸ்டம்புகள் 0/ 75/ 20/

24 திசம்பர், 2008 தரவுப்படி மூலம்: [http://content-aus.cricinfo.com/zimbabwe/content/player/55424.html கிரிக்னிஃபோ

இளமை

பிளெட்சர் தெற்கு உரோடீசியாவின் சாலிஸ்பரியில் (தற்போது அராரே, சிம்பாப்வே) ஓர் விவசாயக் குடும்பத்தில் ஐவரில் ஒருவராகப் பிறந்தார். இவரது மற்றொரு சகோதரர் ஆலனும் துடுப்பாட்ட வீரர் ஆவார்.

சான்றுகள்

  1. Duncan Fletcher appointed India coach retrieved 27 April 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.