ஜூலி கணபதி

ஜூலி கணபதி 2003ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது ஸ்டீஃபன் கிங் எழுதிய மிசரி என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட, அதே பெயரைக் கொண்டு 1990இல் வெளியான அமெரிக்க திரைப்படத்தின் மீளாக்கமாகக் கருதப்படுகிறது[1]

ஜூலி கணபதி
இயக்கம்பாலு மகேந்திரா
நடிப்புஜெயராம்
சரிதா
ரம்யா கிருஷ்ணன்
வெளியீடு2003
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைக்கரு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஜூலி கணபதி (சரிதா) மங்கா என்ற தொலைக்காட்சித் தொடரின் அதீத விசிறி. பல ஆண்டுகளாக பார்த்துவந்த ஜூலி அதில் வரும் முதன்மை நாயகியாகவே தன்னை எண்ணிக் கொள்கிறாள். தொடரின் கதாசிரியர் பாலமுருகன் (ஜெயராம்) மங்காத் தொடரின் கடைசி சிலக் காட்சிகளை எந்த இடையூறுமின்றி தனித்து எழுத வீட்டைவிட்டு வெளியேறுகிறார். எழுதியபிறகு திரும்புகையில் அவரது வண்டி விபத்துக்குள்ளாகிறது; இதில் பலத்த காயமடைந்து நடக்க இயலாநிலைமையில் ஜூலி அவரைக் காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். அவள் மனநிலை பிறழ்ந்த நிலையில் உள்ளதை அறியாத பாலமுருகனிடம் மங்கா தொடரின் விசிறி தான் என்றும் கடைசி காட்சிகளை தனக்குப் படிக்க கொடுக்குமாறும் வற்புறுத்துகிறாள். அடுத்த சில நாட்களில் கதையைப் படித்த ஜூலிக்கு கதையின் முடிவு பிடிக்காது போகிறது. முடிவை மாற்றக்கோரி பாலமுருகனை பல வழிகளில் வற்புறுத்துகிறாள். கடைசி நேரத்தில் அவளிடமிருந்து தப்பி ஓடுகிறார்.

நடிகர்களும் குழுவும்

இசையமைப்பு

மேற்கோள்கள்

  1. Eat This With Some Fava Beans

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.