ஜாக் கலிஸ்

ஜாக் ஹென்றி கலிஸ் (Jacques Henry Kallis, பிறப்பு: அக்டோபர் 16, 1975),தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மித விரைவு பந்துவீச்சாளரும் ஆவார். மேலும் இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஒட்டங்கள் மற்றும் 250 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ள ஒரே வீரர் இவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத் துறையர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1] மேலும் ஒருநாள் போட்டிகளில் 131 கேட்சுகளைப் பிடித்துள்ளார். மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ள இவர் மொத்தம் 13,289 ஓட்டங்களையும் 290 இலக்குகளையும் எடுத்துள்ளார். மேலும் 200 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.[2][3]

ஜாக் கலிஸ்

தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜாக் ஹென்றி கலிஸ்
பிறப்பு 16 அக்டோபர் 1975 (1975-10-16)
கெப்டவுன், தென்னாபிரிக்கா
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 262) திசம்பர் 14, 1995:  இங்கிலாந்து
கடைசித் தேர்வு திசம்பர் 18, 2013:  இந்தியத்
முதல் ஒருநாள் போட்டி (cap 38) சனவரி 9, 1996:  இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 11, 2013:   இந்தியத்
சட்டை இல. 3
அனைத்துலகத் தரவுகள்
தேர்வுஒ.நாT20I
ஆட்டங்கள் 165 323 25
ஓட்டங்கள் 13,174 11,554 666
துடுப்பாட்ட சராசரி 55.12 45.13 35.05
100கள்/50கள் 44/58 17/86 0/5
அதியுயர் புள்ளி 228 139 73
பந்துவீச்சுகள் 20,166 10,732 276
விக்கெட்டுகள் 292 272 12
பந்துவீச்சு சராசரி 32.43 31.83 27.75
5 விக்/இன்னிங்ஸ் 5 2 0
10 விக்/ஆட்டம் 0 n/a 0
சிறந்த பந்துவீச்சு 6/54 5/30 4/15
பிடிகள்/ஸ்டம்புகள் 199/– 127/– 7/–

திசம்பர் 22, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

இவர் மொத்தம் 166 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இவரின் மட்டையாளர் சராசரி 55 க்கும் அதிகமாக உள்ளது.[4][5] 2007 அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்கள் வரையிலான நான்கு போட்டிகளில் ஐந்து நூறு ஓட்டங்கள் எடுத்துள்ளார். சனவரி 2011 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேருத் துடுப்பாட்டத்தின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இது இவரின் 40 ஆவது நூறு ஆகும். இதன்மூலம் அதிக நூறுகள் அடித்த வீரர்களில் ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். சச்சின் டெண்டுல்கர் 51 நூறுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

2008 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. 2005 ஆம் ஆண்டில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருதையும், 2007 ஆம் ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருதையும் பெற்றார்.[6] சோபர்ஸ், மற்றும் வால்ரர் ஹமொண்ட், ஜாக் கலிஸ் ஆகியோர் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் சகலத் துறையர்கள் என கெவின் பீட்டர்சன் தெரிவித்தார். இவர்களின் தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50 க்கும் அதிகமாகவும், ஒருநாள் போட்டிகளில் 20 க்கு அதிகமாகவும் உள்ளது.[7]

சனவரி 2, 2013 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 13,000 ஓட்டங்கள் எடுத்தார்[8]. இதன்மூலம் இந்த இலக்கினை எடுத்த முதல் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் சர்வதேச அளவில் நான்காவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 292 இலக்குகளையும் எடுத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிகஓட்டங்கள் எடுத்த மட்டையாளர்களுக்கான தரவரிசையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார்.[9][10][11][12][13] 2013 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.[14] டிசம்பர் 2013 இல் டர்பனில் நடந்த இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டத்துடன் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[15][16][17] இவரின் இறுதிப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார் இதன்மூலம் இறுதிப்போட்டியில் நூறு அடித்த சில துடுப்பாட்டக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.[18][19] சூலை 30,2014 இல் அனைத்து வடிவ துடுப்பாட்டங்களிலும் இருந்து ஓய்வு பெற்றார்.[20]

சான்றுகள்

  1. Dwaipayan Datta (27 December 2013). "Jacques Kallis: Two greats rolled into one". Times of India. http://timesofindia.indiatimes.com/sports/cricket/top-stories/Jacques-Kallis-Two-greats-rolled-into-one/articleshow/27986858.cms. பார்த்த நாள்: 27 December 2013.
  2. "ODIs – 1000 runs, 50 wickets and 50 catches". ESPN Cricinfo. பார்த்த நாள் 21 November 2007.
  3. Tests – 1000 runs, 50 wickets, and 50 catches, கிரிக்இன்ஃபோ, Retrieved on 21 November 2007
  4. "All-round records | Test matches | Cricinfo Statsguru | ESPN Cricinfo". Stats.espncricinfo.com. மூல முகவரியிலிருந்து 8 October 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 July 2012.
  5. "Jacques Kallis | South Africa Cricket | Cricket Players and Officials". ESPN Cricinfo. பார்த்த நாள் 21 July 2012.
  6. "Jacques Kallis | South Africa Cricket | Cricket Players and Officials | ESPN Cricinfo". Content-nz.cricinfo.com. பார்த்த நாள் 21 July 2012.
  7. Hobson, Richard (12 November 2009). "Refreshed Kevin Pietersen hoping for change of stance from South African fans". The Times (London). http://www.timesonline.co.uk/tol/sport/cricket/article6913053.ece.
  8. "Silent warrior is one up on Rahul Dravid". Times Of India. http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournament/india-in-south-africa-2013/top-stories/Silent-warrior-is-one-up-on-Rahul-Dravid/articleshow/28115976.cms. பார்த்த நாள்: 26 December 2013.
  9. "Kallis goes past Dravid, becomes third highest Test run-getter". Times Of India. http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournament/india-in-south-africa-2013/top-stories/Kallis-goes-past-Dravid-becomes-third-highest-Test-run-getter/articleshow/28105901.cms. பார்த்த நாள்: 26 December 2013.
  10. "BBC Sport – Jacques Kallis is fourth man to reach 13,000 Test runs". Bbc.co.uk (2 January 2013). பார்த்த நாள் 26 December 2013.
  11. "Forbes India Magazine – Is Jacques Kallis Test Cricket's Unsung Hero?". Forbesindia.com. பார்த்த நாள் 26 December 2013.
  12. "Records | Test matches | Batting records | Most runs in career | ESPN Cricinfo". Stats.espncricinfo.com (1 January 1970). பார்த்த நாள் 26 December 2013.
  13. "Kallis, Amla, Steyn among Wisden’s five Cricketers of the Year". Wisden India. 10 April 2013. http://www.wisdenindia.com/cricket-news/kallis-amla-steyn-named-wisden-cricketers-year/57807.
  14. "South Africa Cricket News: Jacques Kallis to retire after Durban Test". ESPN Cricinfo. பார்த்த நாள் 26 December 2013.
  15. NDTVCricket. "South Africa's Jacques Kallis to quit Tests after India series | India vs South Africa Series, 2013-14 - News | NDTVSports.com". Sports.ndtv.com. பார்த்த நாள் 26 December 2013.
  16. "Kallis to call time on Test career | London Evening Standard". Standard.co.uk. பார்த்த நாள் 26 December 2013.
  17. "Records / Test matches / Batting records / Hundred in last match". Cricinfo (26 December 2013). பார்த்த நாள் 26 December 2013.
  18. "Records / Test matches / Batting records / Oldest player to score a hundred". Cricinfo. பார்த்த நாள் 26 December 2013.
  19. "Kallis retires from international cricket". ESPNcricinfo. பார்த்த நாள் 30 July 2014.

வெளியிணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.