செப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

செப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by copper production) என்பது செப்பு எனப்படும் தாமிரத்தை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலாகும். இப்பட்டியல் 2014 ஆம் ஆண்டு சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட தாமிரத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலாகும்.

2012 இல் உலக செப்பு உற்பத்தி
செப்பு உற்பத்தியில் முதல் ஐந்து இடம்பிடித்த நாடுகளின் உற்பத்திப் போக்குகள்

தாமிரத்தை அதிகமாகப் பெற்றுள்ள நாடுகள் பொதுவாக அவற்றை உருக்கி எடுத்துக் கொள்ளும் வகையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஒரு நாட்டின் செப்பு உற்பத்தியானது, உருக்கி எடுத்து செய்யும் உற்பத்தி மற்றும் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட தயாரிப்பு இரண்டும் பெரிதும் வேறுபடுகின்றன.

தரம்நாடு/பகுதி2014 இல் செப்பு உற்பத்தி (ஆயிரம் டன்கள்)
 உலகம்18,700
1 சிலி5,800
2 சீனா1,620
3 பெரு1,400
4 அமெரிக்கா1,370
5 காங்கோ மக்களாட்சிக் குடியரசு1,100
6 ஆத்திரேலியா1,000
7 உருசியா850
8 சாம்பியா730
9 கனடா680
10 மெக்சிகோ520
11 கசக்ஸ்தான்430
12 போலந்து425
13 இந்தோனேசியா400
மற்ற நாடுகள்2,400

சென்ற நூற்றாண்டின் ஒப்பீட்டு அளவுகள்.[1]

தரம்நாடு/பகுதி1907 இல் செப்பு உற்பத்தி (ஆயிரம் மெட்ரிக் டன்கள்)
 உலகம்723
1 அமெரிக்கா399
2 மெக்சிகோ61
3 எசுப்பானியா மற்றும் போர்ச்சுக்கல்50
4 ஜப்பான்50
5 ஆஸ்திரலேசியா42
6 சிலி27
7 செருமனி21
8 உருசியா15

மேற்கோள்கள்

  1. Encyclopaedia Britannica, 11th ed. (1910), vol. 7, p. 109.

இவற்றையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.