இஞ்சி
இஞ்சி (
Zingiber officinale இஞ்சி | |
---|---|
![]() | |
Secure | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்குந்தாவரம் |
வகுப்பு: | Liliopsida |
வரிசை: | இஞ்சிவரிசை |
குடும்பம்: | இஞ்சிக் குடும்பம் |
பேரினம்: | Zingiber |
இனம்: | Z. officinale |
இருசொற் பெயரீடு | |
Zingiber officinale ரொசுக்கோ[1] | |
பெயர் தோற்றம்
இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.[2]
மருத்துவ குணங்கள்
தொடர்ந்து உண்டால் தீரும் நோய்கள்:பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.
பொதுக் குணம்
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
- இஞ்சி இலைகளிலும், தண்டுகளிலும் மணம் இருக்கும்.
- இலைப்பகுதி உலர்ந்ததும் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும்.
- கடுமையான கார ருசி உடையது.
இஞ்சிச் சொரசம்
நன்றாகப் பருத்த இஞ்சியின் தோலைச் சீவி அதை மெல்லிய பில்லைகளாக நறுக்கி, அதில் 24 கிராம் எடை அளவு எடுத்து ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு, இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றை அதில் விட்டு 5 கிராம் எடையளவு இந்துப்பைத் தூள் செய்து அதில் போட்டு நன்றாக கலக்கி மூன்றுநாட்கள் மூடி வைத்திருந்து பிறகு தினசரி இஞ்சித் துண்டுகளை மட்டும் வெளியே எடுத்து ஒரு சுத்தமான தட்டில் பரப்பி தூசு எதுவும் விழாதபடி மெல்லிய துணியால் மூடி வெய்யிலில் நன்கு காய வைக்க வேண்டும். மாலையில் காய்ந்த துண்டுகளை மீண்டும் மீதமுள்ள இந்துப்பு கலந்த எலுமிச்சைச் சாற்றில் போட்டு காலை வரை ஊற வைத்து மீண்டும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். இவ்விதமாக இஞ்சி எலுமிச்ச சாற்றை முழுவதுமாக உறிஞ்சிய பின் நன்கு சுக்கு போல காய விட்டு எடுத்து ஒரு கண்ணாடி சீசாவில் போட்டு வைத்து கொள்ளவேண்டும். இதுவே இஞ்சிச் சொரசம் எனப்படும். வாயு தொந்தரவு, அஜீரணம், புளியேப்பம், பித்த கிறுகிறுப்பு ஏற்படும் சமயம் 2½ கிராம் எடை முதல் 5 கிராம் எடை வரை (ஒரு சிறு துண்டு) காலை மாலை சாப்பிட்டு வர மேற்கண்ட கோளாறுகள் பூரணமாக குணமாகும்.
பழம்பாடல்
“ |
|
” |
காலையில் இஞ்சி சாறுடன் தேன் கலந்தும்,மதிய உணவுக்குப் பின் சுக்கு,கருப்பட்டி கலந்த சுக்கு கசாயமும்,மாலையில் (இரவு உணவுக்கு பின்) கடுக்காய் சூரணம் என 48 நாட்கள் (மண்டலம்) சாப்பட்டு வந்தால் உடல் சோர்வு இன்றி சுறுசுறுப்பாக இருக்கலாம்.
உபயோக முறைகள்
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.
இஞ்சி சமையல்
.jpg)
- இஞ்சித்துவையல்
- இஞ்சிக்குழம்பு
- இஞ்சிப்பச்சடி
- இஞ்சிக்கஷாயம்
சுக்கு
உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும். இது ஓராண்டுப் பயிராகும்.
மேலும் படிக்க
மேற்கோள்கள்
- "Zingiber officinale information from NPGS/GRIN". www.ars-grin.gov. பார்த்த நாள் 2008-03-03.
- ஞா. தேவநேயப்பாவாணர். பண்டைத் தமிழ் நாகரிகமும், பண்பாடும், பக் 99