இந்திய வாசனைத் திரவியங்கள்

வாசனைத் திரவியங்கள், இந்த்யா மற்றும் பிற ஆசிய நாடுகளில், 2000 கி.மு முதலே பயன்படுத்தியதாக குறிப்புகள் உள்ளன. [1]. இதற்கு உதாரணமாக இராமாயணத்தில், கிராம்பும், லவங்க பட்டையும் பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது.

Indian spices

இந்தியாவில், இந்த வாசனைத் திரவியங்கள் பல் உணவுகளில் பல காரணங்களுக்காக பயன்படுத்தப்படும். சுவையான குழம்பு வகைகள் முதல் இனிப்பு வகைகள் வரை இவை பயன்படுத்தப் படுகிறது. இவை முழுமையாகவோ, பொடியாகவோ, வருத்ததாகவோ அல்லது வெட்டியதாகவோ உணவுகளில் சேர்க்கப்படுகிறது. சில சம்யங்களில் உணவின் பரிமாற்றத் தோற்றத்தை மேம்படுத்தும் அழகு பொருளாகவும், பல சமயங்களில் உணவுடன் கலந்த மருந்தாகவும் உபயோகப்படுத்தப் படுகிறது.

பட்டியல்

இந்திய நாட்டில் பயன்படுத்தப்படும் வாசனைத் திரவியங்களின் பட்டியல் கீழே

படிமம்பெயர்ஆங்கில பெயர்குறிப்புகள்
இஞ்சிGingerபசியின்மை, செரியாமை போன்றவற்றை குணப்படுத்தும்
உப்புSaltசுவைக்கு மிகவும் அவசியம். பதனப்படுத்தும் பொருளாகவும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது
ஏலக்காய்Cardamomதென் இந்திய மாநிலங்களில் தேநீரிலும், பாயாசத்திலும் சேர்க்கப்படுகிறது.
கடுகுMustard seedவங்காள மாநிலத்தில் கடுகு எண்ணெய், சமையலில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
கிராம்புCloveமருத்துவ முறையில் செரிமானத்துக்காகவும், கிராம்பு எண்ணெய் பல் வலிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
குங்குமப்பூSaffronஉலகின் மிக விலையுர்ந்த வாசனைத் திரவம். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை உண்டால் முன்னேற்றமுள்ளதாக ஆராய்ச்சி[2] கூறுகிறது
கொத்தமல்லிCorianderபெரும்பாலும் நறுமணத்திற்காக உபயோகப்படுகிறது
புளிTamarindதென் இந்திய சமையலில் மிகவும் பயன்படுத்தும், அறுசுவைகளில் ஒன்று
பூண்டுGarlic
/*படிமம் தேவை*/பெருங்காயம்Asafoetidaசெரிமானதிற்கு பயன்படுத்தப்படுகிறது. கருத்தடை குணங்கள் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. [3]
மிளகுPepperகேரள மாநிலத்தில் அதிகமான சாகுபடி நடக்கிறது. சலி ம்ற்றும் இரும்பலை குணப்படுத்தும் கை

வைத்திய மருந்தாக திகழ்கிறது

மேற்கோள்கள்

  1. Murdock, Linda (2001). A Busy Cook's Guide to Spices: How to Introduce New Flavors to Everyday Meals. Bellwether Books. p. 14. ISBN 9780970428509.
  2. Hausenblas HA; Saha D; Dubyak PJ; Anton SD (November 2013). "Saffron (Crocus sativus L.) and major depressive disorder: a meta-analysis of randomized clinical trials". Journal of Integrative Medicine. 11 (6): 377–83. PMC 4643654 . PubMed. doi:10.3736/jintegrmed2013056.
  3. ^ John M. Riddle 1992. Contraception and abortion from the ancient world to the Renaissance. Harvard University Press p. 28 and references therein
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.