சிறுவிடை (கோழி)

சிறுவிடை (en:siruvidai) என்பது கோழி இனங்களில் ஒன்றாகும். இவை தமிழகத்தின் கோழி இனம் என்று அறியப்படுகின்றன. இக்கோழிகள் தமிழகத்தின் சில இடங்களில் குருவுக் கோழிகள் எனவும், சில இடங்களில் சித்துக் கோழிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

சிறுவிடை சேவல்கள் அதிகபட்சமாக இரண்டு கிலோ எடையும், கோழிகள் அதிகபட்சமாக ஒன்றரைக் கிலோ எடையும் உடையன. இக்கோழிகள் ஒரு ஈத்திற்கு 10-14 முட்டைகள் வரை இடுகின்றன. பெரும்பாலான முட்டைகளை பெறிக்கும் திறன் பெற்றவையாகவும், குஞ்சுகளை பிற எதிரிகளிடமிருந்து காக்கும் திறன்பெற்றவையாகவும் அறியப்படுகின்றன. வளர்ப்பாளர்கள் சிறுவிடையை அதிக தாய்மையுணர்வை கொண்டவையாக கூறுகின்றார்கள். சிறுவிடை முட்டை சராசரியாக 35-40 கிராம் எடை கொண்டதாக உள்ளன.

இந்து தொன்மவியலில்

இந்து தொன்மவியலில் முருகனின் கொடியில் இவ்வகை சிறுவிடை சேவல் இடம் பெற்றுள்ளது. சிறுவிடை சேவல்களின் தொன்மைக்கு சான்றாக இதனை கருதுவோரும் உண்டு.

கல்வெட்டுகள்

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே இந்தளூர் எனுமிடத்தில் கோழிக்காக எடுக்கப்பெற்ற நடுக்கல் காணப்படுகின்றது. அதில் ‘கீழ்ச்சேரிகோழி பொடுகொத்த’ என்று பழந் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இது மேல்சேரிக் கோழிக்கும் கீழ்ச்சேரி கோழிக்கும் நடத்தப்பட்ட சண்டையில் மரணம் அடைந்த கோழியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.[1] இந்தக் கோழியின் அமைப்பு சிறுவிடை கோழிகளைப் போல இருப்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரங்கள்

  1. விலங்குக்கு பொன் நாணயம் வெளியிட்டவன் தமிழன் தினமலர் 15 ஜனவரி 2017

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.